குடியாத்தம் தாலுகா மார்க்.கம்யூஆர்பாட்டம்

குடியாத்தம் தாலுகா
மார்க். கம்யூ சார்பில்
ஆர்பாட்டம்

குடியாத்தம்:
ஒன்றிய அரசின் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய குழுவின் முடிவின்படி மார்க்., கம்யூ கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா குழு சார்பில், தட்டப்பாறையில் கிளை செயலாளர் பாபு தலைமையிலும், மூங்கம்பட்டில் கிளை செயலாளர் திலகவதி தலையிலும், அக்ராவரத்தில் தாலுக்கா குழு உறுப்பினர் அம்மு தலைமையிலும், சைனகுண்டாவில் கிளை செயலாளர் வெங்கடாஜலபதி தலைமையிலும் இன்று ஆர்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், தாலுகா செயலாளர் சிலம்பரசன் மற்றும் குமாரி, கோட்டீஸ்வரன் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்