விஐடி விழாவில் கவிஞர் வைரமுத்து
வேலூர்
ஹிந்தி பேசுபவர்களுக்கு தான் இந்தியா என்றால் இருந்துவிட்டு போகட்டும் - தமிழியக்க பாவேந்தர் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு- ஹிந்தி வந்தால் பிளவு வரும் - கவிஞர் அப்துல்காதர் பேச்சு
______________________________________
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132 ஆவது பிறந்த நாள் விழா வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழியக்க பொதுசெயலாளர் அப்துல்காதர்,பொருளாளர் பதுமனார்,உள்ளிட்டோர்கலந்துகொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார்
இந்த விழாவில் தமிழியக்க பொதுசெயலாளர் அப்துல்காதர் பேசுகையில் பாவிருக்கும் தமிழ் இருக்க பாய் விரிக்கும் ஹிந்திக்கே ஆட்சி என்றார் பாவேந்தர் பாவிருக்கும் தமிழிருக்க பலபேருக்கு பாய் விரிக்கும் ஹிந்தி ஆட்சி என்றார் அந்தி வந்தால் நிலவு வரும் ஹிந்தி வந்தால் பிளவு வரும் என பேசினார்
பின்னர் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில் ஹிந்தியை எதிர்க்கவும் தமிழை காக்கவும் பலர் உயிர் தியாகம் செய்தனர் அவர்களை வணங்குகிறோம் ஆனால் இவ்வளவு போராட்டம் செய்தும் நாம் மீண்டிருக்கிறோமா என்பது கேள்வி வட நாட்டு கலைஞர்கள் சிலர் ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்புகிறேன் ஹிந்தி பேசுகிறவர்கள் மட்டும் தான் இந்தியாவில் தேசிய மொழியாக இருந்துவிட்டு போகட்டும் ஹிந்தி பேசுகிறவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் ஹிந்தி தேசிய மொழியாக இருந்துவிட்டு போகட்டும் ஆனால் இது பன் முகத்தன்மை பல கலாச்சாரங்களை சேர்த்து தைக்கப்பட்ட தேசம் ,தமிழர்கள் தற்போது குழந்தைகளுக்கு பெயரை வட மொழியில் வைக்கின்றனர் பெயர் என்பது நமது அடையாளம் கலாச்சாரம் பெயர் என்பது வரலாற்று தொடர்ச்சி தமிழில் குழந்தைகளுக்கு பெயரை சூட்டுங்கள் அது தான் பாவேந்தருக்கு நாம் செய்யும் பெருமை என்று பேசினார்
Comments
Post a Comment