உணவுப் பண்பங்கள் விலை உயர்வு காலத்தின் கட்டாயம் ஓட்டல்கள் சங்க தலைவர் பேட்டி
,தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்புநிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா குறைந்ததும், கடந்த மாதத்திலிருந்து ஓரளவு பாதிப்பு குறைந்தது. ஆனால் பழைய நிலையை எட்டுவதற்கும், இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சீர்க்குலைவுகளில் இருந்து மீள்வதற்கும், மேலும் இரண்டு ஆண்டுகளாகும்.
ஆனால் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. உணவு எண்ணெய் விகைகள் 25 சதவீதம், தொழிலாளர்கள் சம்பளம் 10 முதல் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப்பண்டங்கள் உற்பத்தி செலவும் அதிகரித்து விட்டது. உணவுத் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், வாடிக்கையாளர் நலம் காத்தல் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
அரசுக்கு உரிய நேரத்தில் வரியை செலுத்த வேண்டும். சோதனையான காலகட்டத்தில் ஓட்டல் தொழில் உள்ளது. இதனால் உணவுப் பண்டங்களின் உயர்வை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அனைத்து பிரச்சனைகளை ஆய்வு செய்து, முடிவுகளை எடுத்து ஓட்டல் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment