கொலை
முகம் சிதைத்து
மூதாட்டி கொலை
பேர்ணாம்பட்டு
பேர்ணாம்பட்டு அருகே, முகம் சிதைத்து மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறிதது போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே அரவட்லா பாஸ்மாக் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 45. விவசாயி. அவரது தாயார், வள்ளியம்மாள், 60. கடந்த 25 ம் தேதி வெளியே சென்ற வள்ளியம்மாள் வீடு திரும்பவில்லை. பேர்ணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு பாஸ்மாக் பெண்டா வனப்பகுதியில் மூதாட்டி ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிவந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர் வள்ளியம்மாள் என்பதும், மர்ம நபர்கள் அவர் முகத்தை சிதைத்து கல்லால் தாக்கி கொலை செய்தும் தெரியவந்தது. பேர்ணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment