சேதம்
திருப்பத்தூர்மாவட்டம்
ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம் அடையும் அபாயம். உயிர் சேதம் ஏற்படுவதற்க்கு முன்பு சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
________________________
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இணைக்க கூடிய தரைப்பாலம் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் விட்டு விட்டு பெய்த தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் மாதனூர்-உள்ளி இணைக்கக் கூடிய தரைப்பாலம் அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அப்போது மாணவர்கள், பொதுமக்கள் மாதனூரில் இருந்து உள்ளி, வளத்தூர், சின்ன தோட்டாளம், தொட்டாளம், குடியாத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குசெல்லக்கூடிய மக்கள் போக்கு வரத்து தடையால் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு சார்பில் மணல் மூட்டைகள் ராட்சத பைப்புகள் அமைத்து தற்காலிக சாலை அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.இந்நிலையில் கடந்த 19.05.2022ம் தேதி பெய்த மழை காரணமாக 2 வது முறை ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் மீண்டும் அடித்து செல்லப்பட்டது.இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஆந்திரா வனப்பகுதி மற்றும் மாவட்ட முழுவதும் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் பகுதியில் உள்ள தரை பாலம் நீரில் மூழ்கி உள்ளது, பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மூன்றாவது முறையாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் முறையாக நீர் செல்ல முடியாமல் ஏரி போல் ஒருபுறம் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பாலம் மீண்டும் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உயர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் மட்டும் சமூக ஆவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment