கைது அதிர்ச்சி

தமிழகத்தில் மத அடிப்படைவாதிகள் 11 பேர் கைது அதிர்ச்சி அளிக்கிறது

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு துறை  NIA மற்றும் அமலாக்கத்துறை சோதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்திய சோதனைகளில் தேச விரோத செயல்களில் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் கம்ப்யூட்டர்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என் ஐ ஏ மற்றும் அமுலாக்கத்துறை அறிவிப்பு நாடு முழுவதும் நடத்திய சோதனையில் 45 பேர் கைது கேரளத்தில் 19 பேரும் தமிழகத்தில் 11 பேரும் கர்நாடகத்தில் ஏழு பேரும் மீதமுள்ள எட்டு பேர் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படை வாதம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதா ? என்ற ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுகிறதா மீண்டும் 1998 -99 நிகழ்வுகள் நடைபெற திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள் தமிழக  உளவுத்துறை செயல் இழந்து விட்டதா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள் தமிழக அரசு விழிப்போடு இருந்து தமிழகத்தில் கடந்த காலத்தில் நடந்தது போல வன்முறை நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்று விஜய பாரத மக்கள் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்

என்றும் தாய்நாட்டுப் பணியில்

கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர்

நிறுவனர்-விஜய பாரத மக்கள் கட்சி

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை