சனி பேசுகிறார்

நான்.........சனீஸ்வரன் பேசுகின்றேன்..............................                         ஏழரைச்சனி அர்த்தாஷ்டமசனி கண்டகசனி அஷ்டமசனி என்றால் கவலை வேண்டாம் ஆஞ்சநேயர் வழிப்பாடு நன்மை தரும் என்று அனைவரும் ஆலோசனை கூறுகிறார்கள்  ஆஞ்சநேயர் பக்தர்களை நான் துன்புறுத்த மாட்டேன்  என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்  ஆஞ்சநேயர் வழிப்பாட்டிற்கு மிகவும் தேவையான மனத்தூய்மையை அனைவரும் மறந்து விட்டீர்கள்   பல்வேறு தீய எண்ணங்களுக்கு தங்களுடைய இதயத்தில் வாடகை இல்லாமல் குடி அமர்த்தி விட்டு மனத்தூய்மையுடன் இருக்கிறேன் என்று கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?   நான்---நீதிதேவன்&கர்மகாரகன்    ஒவ்வொருவரும் செய்து வரும் தவறுகளுக்கு தண்டனைகள் கொடுக்ககூடிய அதிகாரத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள் ஏழை-பணக்காரன் படித்தவன்-படிக்காதவன் போன்று எவ்வித பாகுபாடுமில்லாமல் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு கடமை தவறாமல் தண்டனை கொடுத்து விடுவேன்   எங்கெல்லாம் தூய்மை இருக்கிறதோ அங்கெல்லாம் என்னால் நெருங்க முடியாது எங்கெல்லாம் அழுக்கு இருக்கிறதோ அங்கெல்லாம் நான் இருப்பேன்  என்னுடைய பார்வை சர்வநாசனம்  நான் வாங்கி வந்த வரமிது என்னுடைய விதி இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளது  மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று திருமூலர் கூறியுள்ளார்  மனத்தூய்மையில்லாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வந்தால் எவ்வித பயனுமில்லை  கோவிலுக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் சனி துன்புறுத்தாமல் விடமாட்டார்  பாழா போன சனி பாடா படுத்துகிறது என்று என்னை எல்லோரும் திட்டி கேவலமாக பேசுகிறீர்கள் பெற்றோர்கள் குழந்தைகளை திட்டும் பொழுது சனியனே என்று திட்டுகிறார்கள்   கொலை---கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது  அதை தானே நான் செய்து வருகிறேன்  ஒவ்வொருவரும் ஏராளமான தவறுகளை செய்து விட்டு தண்டனை கொடுக்கும் என்னை திட்டி கொண்டிருப்பது எவ்விதத்தில் நியாயம்???   அவரவர்களுடைய மனச்சாட்சிக்கு விரோதமில்லாத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு என்னால் எள்ளளவு துன்பங்கள் கூட நேராது என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்    நன்றியுடன்.....................................                          நீதிதேவன்  கர்மகாரகன்         ஆயுள்காரகன்   சனைச்சரன்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்