வேலூர் குடியரசு தின விழா
வேலுார்
மாவட்டத்தில்
குடியரசு தினவிழா
வேலுார் மாவட்டத்தில், நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசியகொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
வேலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா, வேலுார் நேதாஜி மைதானத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் 34 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 46 போலீசாருக்கு பதக்கம், 271 அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ், சிறந்த சமூக சேவருக்கான சத்துவாச்சாரி தினேஷ் சரவணனுக்கு சான்றிதழ் அவர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.பி., ராஜேஸ் கண்ணன், தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேலுார் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, வேலுார் மாநராட்சியில் நடந்த விழாவில் மேயர் சுஜாதா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
Comments
Post a Comment