வழக்கு

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்
உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு



வேலுார், மார்ச் 
வேலுாரில், 1. 25 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்ப போலீசார் வழக்கு பதிவு  செய்தனர்.
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு ஊராட்சி உதவி இயக்குனர் ( தணிக்கை )  பிரிவு உள்ளது. வேலுார் மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் 2013 ம் ஆண்டு முதல் நடந்து வரும்  100 நாள் வேலை வாய்ப்பு திட்டப்பணிகள் குறித்த தணிக்கை கடந்த 15 ம் தேதி நடந்தது.
அப்போது, கிராம ஊராட்சி  செயலாளர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருவதாக வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   அன்று மாலை 5:00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் இங்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி, கணக்கில் வராத ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில்,  இந்த பணத்தை ஊராட்சி செயலாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றது தெரியவந்தது. இதையடுத்து உதவி இயக்குனர் (தணிக்கை)  வெங்கடேஷ், மாவட்ட சமூக தணிக்கை  குழு உதவி திட்ட அலுவலர் வசுமதி, மாவட்ட வள அலுவலர் மணிமாறன்,  ஊராட்சி  செயலாளர்கள் மசிகம் ஆறுமுகம், பத்தலப்பல்லி மணிவண்ணன், துத்திக்காடு ஊராட்சி  துாய்மை பணியாளர் திருமலை ஆகிய ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்