பாமக தலைவர் அன்புமணி பேட்டி,
2026 சட்டசபை தேர்தலில்
பா.ம.க., தலைமையில் கூட்டணி
ஆட்சி அமைக்கப்படும்
அன்புமணி
திருப்பத்துார், மார்ச்
2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
திருப்பத்துாரில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது; திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 48 வது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19 வது நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலைக்கு காரணம் தமிழக கவர்னர்தான்.
தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கு தெரியாமல் விற்பதற்கு வாய்ப்பில்லை. கொரோனாவுக்கு பிறகுதான் மது விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த கட்ட இளைஞர்களை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க 17 ஆயிரம் போலீசார், ஒரு டி.ஜி.பி., என உருவாக்கப்பட்டு தடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் அதிகளவு போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்தியாவிலேயே டார்கெட் வைத்து மது விற்பனை செய்யக்கூடிய, அதிக மது விற்பனையாகும், சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மற்றும் அதிக விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்தியாவிலேயே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலமாகவும், அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவற்றுக்கு காரணம் மது. தற்போது மதுக்கடைகள், பார்கள் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் அமைச்சருடைய கூட்டணி என் தெரிகிறது.
மதுவால் 30 சதவீதம் வருவாய் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. மது ஒழிப்பு தான் அண்ணா, பெரியார் கொள்கை.
இவற்றை பயன்படுத்துகிறதி.மு.க., அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையை படிப்படியாக குறைப்போம் என மேடைக்கு மேடை பேசி வந்த தி.மு.க., தற்போது ஒரு கடையை கூட மூடவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுவிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்.
வரும் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதற்கு ஏற்ற 2024 எம்.பி., தேர்தலில் யூகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment