கைது
காட்பாடி அருகே
விவசாயி கொலை வழக்கில்
மருமகன் கைது
வேலுார், ஏப். 28–
காட்பாடி அருகே, விவசாயி கொலை வழக்கில், அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரியை சேர்ந்தவர் செல்வம், 62, விவசாயி. இவரது மகன் பசுமதி, 30, மகள் ஜெயலட்சுமி, 40, அவரது கணவர் வாசு, 35. செல்வத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை பிரிப்பது குறித்து மகனுக்கும், மருமகனுக்கும் தகராறு இருந்து வந்தது. கடந்த 26ம் தேதி இரவு 10:00 மணிக்கு மகள் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்ற செல்வம் சாப்பிட்டு விட்டு வெளியே படுத்து துாங்கினார். நேற்று கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு வீட்டு முன்பு அவர் கிடந்தார். லத்தேரி போலீசார் நடத்திய விசாரணையில், நிலத்தகராறில் மருமகன் வாசு 27 ம் தேதி அதிகாலை செல்வத்தை கட்டையால் அடித்துக் கொலை செய்து ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியது தெரியவந்தது. லத்தேரி போலீசார் வாசுவை இன்று கைது செய்தனர்.
Comments
Post a Comment