முகாம்

6 பேரை கொன்ற
2 காட்டு யானைகள்
நாட்றம்பள்ளி மலைப்பகுதியில்
முகாம்


திருப்பத்துார்: மே 14–
6 பேரை  கொன்ற 2 காட்டு யானைகள் நாட்றம்பள்ளி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலம், மைசூர் வனப்பகுதியிலிருந்து 20 நாட்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதிகள் வழியாக 10 காட்டு யானைகள் தமிழக– ஆந்திரா மாநில வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த  யானைகள் கூட்டத்திலிருந்து இரண்டு காட்டு யானைகள் பிரிந்து தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை வனப்பகுதிக்கு கடந்த வாரம் புகுந்தது.
அந்த  பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 2 பேர்களை மிதித்துக் கொன்றது.  அதற்கு முன்பு இந்த யானைகள் ஆந்திரா மாநிலம், குப்பம் அருகே மல்லனுார் பகுதியில் 4 பேரை தாக்கி கொன்றது. இதனால் ஆந்திரா மாநில வனத்துறையினர் இந்த 2 யானைகளை விரட்டினர்.
இதனால் இந்த 2 யானைகள் கடந்த  12 ம் தேதி திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம்  மலைப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளது. நேற்று 12 ம் தேதி காலை விறகு பொறுக்க இந்த மலைக்கு சென்றவர்களை இந்த யானைகள் விரட்டியடித்தது. சிலரை தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த திருப்பத்துார் வனத்துறையினர் வன அலுவலர் இளங்கோ தலைமையில் 50 பேர் இங்கு முகாமிட்டு  இந்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட முயன்று வருகின்றனர். இதனால் திம்மாம்பேட்டை, தகரகுப்பம், அம்மலுார், கரடி கொள்ளை ஆகிய பகுதிகளில் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை விரட்ட முயன்று வருகின்றனர். 24 மணி நேரமும் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் தமிழக– ஆந்திரா மாநில வனத்துறையினர், போலீசார் இணைந்து இந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்