கைது
14 கிலோ கஞ்சா
கடத்த முயன்றவர்
கைது
வேலுார், ஏப். 28–
ரயிலில் பெங்களூருக்கு கடத்த முயன்ற 14 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், மதுவிலக்கு போலீசார் இன்று காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாலை 3:00 மணிக்கு ஹவுராவிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு செல்லும் எஸ்வந்த்பூர் ரயிலில் சீட்டுக்கு அடியில் 9 பண்டங்களில் 14 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில், ஓடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம், கோச்சபாடா திரேசரு கிராமத்தை சே்ர்ந்த அபிேஷக் குடாய், 23, என்பவர் பெங்களூருக்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment