அறிமுகம்
வி.ஐ.டி., யில் தேசிய
பங்குச்சந்தை அமைப்புடன்
இணைந்து புதிய
பி. காம்., படிப்புக்கள்
அறிமுகம்
வேலுார், ஏப். 14–
வி.ஐ.டி., பல்கலையில், தேசிய பங்குச்சந்தை
அமைப்புடன் இணைந்து புதிய பி. காம்., படிப்புக்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.
வி.ஐ.டி., பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து நிதிச்சந்தை மற்றும் எதிர்கால திறன் தேவைக்கேற்ற புதிய பி. காம்., படிப்புக்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி வேலுார் வி.ஐ.டி., யில் இன்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன், தேசிய பங்குச்சந்தை அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அபிலாஷ் மிஸ்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்படி வி.ஐ.டி., பல்கலை, தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து வி.ஐ.டி., வணிகவியல் துறையின் சார்பில், மூலதனச்சந்தை, நிதி தொழில் நுட்பம் ஆகிய இரண்டு புதிய பி. காம்., படிப்புக்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த படிப்பில் வங்கி மற்றும் நிதித்துறை சம்மந்தமான தொழில் துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்தும் விதத்தில் வி.ஐ.டி., பேராசிரியர்கள், தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பாடதிட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதற்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய என். எஸ்., மார்ட் உடன் இணைந்து புதிய லேப் வி.ஐ.டி., யில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் கூறுகையில், இரண்டு புதிய பி. காம்., படிப்புக்களால் வங்கி மற்றும் நிதி துறையில் 1. 8 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி., துணைத் தலைவர் செல்வம், துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, தேசிய பங்குச்சந்தை அமைப்பின் நிர்வாகிகள் ரங்கநாதன், வினோத், ஜேம்ஸ் பங்கேற்றனர்.
Comments
Post a Comment