சிறப்பாக வாழ வழிகள்

🌹சிறப்பாக வாழ சில வரி(ழி)கள்*

*பிரபலமாக இருக்க ஆசைப்படுவதை விட, பிறருக்கு பலமாக இருக்க ஆசைப்படுவோம்..!*

*ஏளனமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு திமிராய் பதில் சொல்வதில் தவறேதும் இல்லை...!!*

*நல்லெண்ணம் எல்லாப் புண்களையும் ஆற்றும். ஆசைகள் குறையக் குறைய அமைதி பெருகும்.*

*அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதொன்றே, ஒரு சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமான உச்ச விடுதலை.*

*உண்மையான பாசம் இருந்தால் வார்த்தைகள் தேவையில்லை. நினைவுகள் கூட பேசும்.*

*அன்று உடைந்த வீடுகளும் உடையாத உறவுகளும் இருந்தன. இன்று உடையாத வீடுகளும் உடைந்த உறவுகளும் உள்ளன.*

*வாழ்க்கையை சிரித்து வாழ பழகிவிட்டால் பெரிய கஷ்டம் கூட சின்னதாக மாறிவிடும்.*

*நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்பதை விட யாரிடம் சொல்கிறீர்கள் என்பதே முக்கியம்..!!*

*வாழ்க்கை இழுக்கும் திசையில் நீங்கள் போகாதீர்.*

*உங்களுக்குப் பிடித்த திசையில் வாழ்க்கையை இழுத்து உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். அது தான் உங்கள் உண்மையான வாழ்க்கை.*

*காலம் எப்போதும் உங்களுக்கானதாக 
இருக்காது. 
களம்  அமையும் பொழுதே உங்கள் கடமையை செய்து முடித்து விடுங்கள்.*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்