ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி சடங்கு செய்து வரும் இளைஞர்
ஆதரவற்ற 3,008 உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக 2 உடல்கள் ஒப்படைப்பு வேலூர் திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). சமூக சேவகர். இவர் உறவினர்களால் கைவிடப்பட்டு இறந்தவர்களின் உடலை போலீசார் அனுமதி பெற்று சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார். இவர்22 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆதரவற்றவர்களின் உடலை நல்லடக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்றுக் கிடந்த 4 ஆண் உடல்களை அடக்கம் செய்ய அவர் முன் வந்தார். அதன்படி அந்த உடல்களை முறைப்படி போலீஸ் அனுமதியுடன் பெற்றார். தொடர்ந்து அதில் 2 உடல்களை மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக அந்த மருத்துவமனையிலேயே ஒப்படைத்தார். மீதம் உள்ள 2 உடல்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார். அவருடன் ராமன் உதவியாக இருந்தார். மணி...