Posts

Showing posts from May, 2025

அன்னதானம்

Image
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*🙏 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷                   10.05.2025  பிரதோஷம் மற்றும் 12.05.2025  சித்ரா பௌர்ணமி அன்றும் சாதுகார மடம்,வேலூரில்  நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக  அன்ன தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று 10/05/25 மதிய உணவு  அன்னதானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.                    🌷 *நன்றி*🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

புஷ்ப பல்லக்கு விழா

Image
வேலூர்     வேலூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பௌர்ணமி தினத்தில் 8 பூப்பல்லக்குகள் பவணி ஒரு லட்சம் மக்களுக்கு மேலாக பங்கேற்பு  - இந்திய ராணுவத்தின் புகழை போற்றும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்று ஆப்ரேஷன் சிந்தூர் ஜேட் விமானம்   தேரில் அமைத்து கொண்டாடிய இளைஞர்கள்  __________________________________________     வேலூர்மாவட்டம்,வேலூரில் சித்திரை திருவிழா பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்  இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விழாவில் பல்வேறு இடங்களில் மேடைக்கச்சேரிகளும் நடைபெற்றன வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தனித்தனி பல்லக்குகளாக ஜலகண்டீஸ்வரர் கோவில் பூப்பல்லக்கு ,செல்வ விநாயகர் ஆலய பூப்பல்லக்கு, தாரகேஸ்வரர் பூப்பல்லக்கு,விஷ்னு துர்கை பூப்பல்லக்கு,பெருமாள் கோவில் பூப்பல்லக்கு ,கனதுர்கை அம்மன் பூப்பல்லக்கு,வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு ,லஷ...

செய்திகள்

Image
வேலூர்       தி.மு.க ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. வாழையடி வாழையாக வருகின்ற கட்சி. அண்ணாவிற்கு பிறகு கலைஞர், கலைஞருக்கு பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என வாழையடி வாழையாக உள்ள கட்சி துரைமுருகன் பேச்சு.காட்பாடியில்  4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்   வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கழிஞ்சூர் அருப்புமேட்டில் நடந்ததுபொது கூட்டத்திற்கு வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார் தலைமை தாங்கி பேசினார்.வேலூர் மாநகர செயலாளர்  கார்த்திகேயன் எம். எல்.ஏ., முன்னிலை வகித்து பேசினார்.பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;வாழையடி வாழையாகதி.மு.க ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. வாழையடி வாழையாக வருகின்ற கட்சி. அண்ணாவிற்கு பிறகு கலைஞர், கலைஞருக்கு பிறகு முதலமைச்சர...

தேர் திருவிழா

Image
வேலூர்    வேலூர் அருகே   பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு தேரை தூக்கி வழிபாடு -    மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு நேர்த்திகடனை செலுத்தினார்கள்  ____________________________________________      வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு அருகேயுள்ள வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம் இதில் ஆண்டுதோறும் ஏரித்திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத ஏரித்திருவிழா தேர்திரு விழாவானது இன்று நடைபெற்றது வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் ,அன்னாச்சிபாளையம்,.வேலங்காடு,பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டிகொண்டு மாட்டு வண்டிகளிலும் டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டிகொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும் கால்நடைகள் நோய்நொடியின்றி இருக்க வேண்டும் இயற்கை வளங்கள் செழிக்க வேண்டும் என வேண்டுதல்களை வைத்தும் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் பொம்மைகளை காணிக்கையா...

செய்திகள்

Image
ராணிப்பேட்டைமாவட்டம்   காதல் செய்து வீட்டை விட்டு வெளியே வந்த காதலருக்கு நேர்ந்த சோகம் - காதலனுக்கு ரத்த காயம் மருத்துவமனையில் அனுமதி - ஆற்காடு நகர போலீசார் விசாரணை வேலூர் மாவட்டம், வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் - தனலட்சுமி இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட ஜெய் ஆகாஷ் (20) என்ற மகனும் உள்ளனர்.இவரது மகன் அதே பகுதியைச் சேர்ந்த முத்து - தேவகி தம்பதியரின் மகளான புவனேஸ்வரி (21) என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணுக்கு 21 வயதும் ஆணுக்கு 20 வயது என காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் சமூக வலைதளத்தில் இருவரும் சேர்ந்து தன்னை யாரும் வற்புறுத்தவில்லை, கிட்நாப் செய்யவில்லை என அந்தப் பெண் பேசியவாறு  வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் இருவரையும் தேடி அலைந்து உள்ளனர் இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய காதலர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருப்பதை அறிந்த உறவின...

செய்திகள்

Image
வேலூர்     21-5-25 அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புமேலும் இருவர் படுகாயம் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் (67) இவருடைய மனைவி சுமதி (60) இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினர்களை சந்தித்து விட்டு தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருக்கு செல்ல ராணிப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வரும் வழியில் காட்பாடி தாராப்படவேடு சித்தூர் சாலையில் எதிரில் வந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த சுந்தர வாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  அவருடன் பயணித்த அவருடைய மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி க...

வேலை தள்ளி போட வேண்டாம்

Image
*இனிய காலை வணக்கம்* இன்றைய சிந்தனை §§§§§§§§§§§§§§§§ *வேலையைத் தள்ளிப் போடாதீர்கள்* §§§§§§§§§§§§§§§§ சில நிமிடம் தானே  என்று உங்கள் நிமிடங்கள் வீணாவதை அலட்சியம் செய்யாதீர்கள். நிமிடங்களை வீணாக்குவது என்பது நம்மை நாம் சிறிது சிறிதாக வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள். நிமிடங்கள் தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளைப் பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் *(Every minute counts).* உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காது நேரங்கள், நல்ல வாய்ப்புகள்,நல்ல நட்பு.. இவைகள் எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம்.  இந்தக் காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் “நேரம் இருக்கிறதே” அதன் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது, இழக்கக் கூடாதது.  ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு கணமும் உலகில் இயற்கையில் பல மாறுதல்கள் அதாவது அழிவுகளும், வளர்ச்சிகளும் ஏற்பட்டுக் கொண்டே தான் ...

அன்பு

Image
🟢🌼🟢🌼🟢🌼🟢🌼 *🛑👑காலை நேர*            *சிந்தனை* 🟢🌼🟢🌼🟢🌼🟢🌼 *🛑🥎மொட்டுக்களில் ஒளிந்திருக்கும் 'மலர்' போல,* *🛑🥎உங்கள் உள்ளங்களில் மறைந்திருக்கும் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.* *🛑🥎எப்படி என்றால் உதிக்கும் எண்ணத்தில்*  *🛑🥎உயர்வு இருக்க வேண்டும்.* *தாழ்வும் இருக்கக் கூடாது.* *🛑🥎பக்தி இருக்க வேண்டும்* *பயம் இருக்கக் கூடாது*. *🛑🥎உண்மை இருக்க வேண்டும்.* *பொய்மை இருக்கக் கூடாது.* *🛑🥎பொறுமை இருக்க வேண்டும்* *பொறாமை இருக்கக் கூடாது* *🛑🥎அமைதி இருக்க வேண்டும்.* *அலப்பறை இருக்கக் கூடாது.* *🛑🥎அன்பு இருக்க வேண்டும்* *ஆணவம் இருக்கக் கூடாது.* *🛑🥎பாசம் இருக்க வேண்டும்* *வேஷம் இருக்கக் கூடாது.* *🛑🥎ஆகையால் உதிக்கும் எண்ணம் நன்மையாக* *இருந்தால் நீ செய்யும் அனைத்தும்* *தர்மமாக இருக்கும்*. *சிந்தித்து* *செயல்படுங்கள்*. *வெற்றி நிச்சயம்* . *🛑🥎இனிய காலை*              *வணக்கம்🙏* 🟢🌼🟢🌼🟢🌼🟢🌼

பொறுமை

Image
21.5.2025 புதன்கிழமை *இனிய காலை வணக்கம்* இன்றைய சிந்தனை ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; *பொறுமையே மிகச் சிறந்த கொடை!* ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; பொறுமை என்பது ஒரு செயலை துணிந்து செய்யவோ அல்லது சூழ்நிலைகளை சமாளிக்கவோ, கோபப்படாத நிலையில் அமைதியாய் இருப்பதை குறிக்கும். இது ஒரு நல்ல மனநிலை. இது வாழ்வில் பல நன்மைகளை பெற்றுத் தரும். பொறுமையாக இருப்பது  மனநலத்தையும் உடல் நலத்தையும் காக்கும். எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை அமைதியுடன் வைத்திருக்க உதவும். "பொறுமை கடலினும் பெரிது" என்பது வள்ளுவர் கூற்று. பொறுமையாக இருப்பது என்பது மிகச்சிறந்த கொடையாகும். இந்த குணம் உடையவர்களை அனைவரும் விரும்புவார்கள். கோபம் மற்றும் பொறாமை மனிதர்களுக்கு முதல் எதிரி. நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த வகையில் நடைபெறாவிட்டால் ஆத்திரப்படுகிறோம்; பொறுமை இழக்கிறோம். நம்மை ஒருவர் அவமதித்தாலோ அல்லது தீமை செய்தாலோ பொறுமை இழந்து அவர்களுக்கு தீமை செய்யத்துடிக்கிறோம். பொறுமை உள்ளவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும், பிரச்னைகள் ஏற்படும் பொழுதும்  அமைதி காத்து பொறுமையாக பிர...

விருது

Image
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள். இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள். உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன். உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்- நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது. உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம். ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான். உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன. எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது. நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர. ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன். ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான். உங்களுக்கு என்னால் படைக்க முடிந்...

அப்பா

Image
*வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது*  *அம்மாவா ?* *அப்பாவா ?* *🌻உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !* *உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான்* *என்கிறார்கள் பல அறிஞர்கள் !* *🗣தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !* *💃ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் ! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !* *நம்பிக்கை ஊட்டுபவர் !* *பண்புகளை ஊட்டுபவர் !* *வழிகாட்டி !* *என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்*. *ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?* *அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.* *🗣ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்*. *🗣ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்*. *🌻எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது*. *💃சின்ன வயதில் மழலையா...

வாழ்த்து

Image

விஐடி விழா

Image
వెల్లూరు 17-5-25    వెల్లూరు టెక్నలాజికల్ యూనివర్సిటీలో జరిగిన స్టార్ ప్రాజెక్ట్ డే కార్యక్రమంలో, ఒక పూర్వ విద్యార్థి మాట్లాడుతూ, మద్యం దుకాణాల వల్ల సమాజం దిగజారిపోతోందని అన్నారు. సినిమా పరిశ్రమలో మద్యం తాగే దృశ్యాలను చూపించకూడదు. - విద్యార్థుల జీవన నాణ్యతను మెరుగుపరిచే వాటిలో విద్య ఒకటి. యువత వ్యవసాయం చేయడానికి ముందుకు రావాలి. నటుడు కార్తీ ప్రసంగం  ___________________________________________      వెల్లూరు జిల్లాలో, వెల్లూరు టెక్నికల్ యూనివర్సిటీ, జిల్లాలోని అగ్రశ్రేణి విద్యార్థులలో ఒకరిని వెల్లూరులోని ప్రభుత్వ పాఠశాలల్లో చదివించేలా చేసే స్టార్ ప్రాజెక్ట్, వెల్లూరు టెక్నికల్ యూనివర్సిటీ ఛాన్సలర్ విశ్వనాథన్ అధ్యక్షతన జరిగింది. సినీ నటుడు కార్తీ మరియు విశ్వవిద్యాలయ ఉపాధ్యక్షుడు శంకర్ శేఖర్, కాదంబరి తదితరులు పాల్గొని మాట్లాడారు. మధురైకి చెందిన పూర్వ విద్యార్థిని మాలతి మాట్లాడుతూ, చాలా మంది విద్యార్థులు తమ తల్లుల పెంపకంలో పెరుగుతారని మరియు ముందుకు సాగుతారని అన్నారు. దీనికి ప్రధాన కారణం మద్యం. చాలా మంది తండ్రులు పనికి వెళ్లి డబ్బు సంపాదిస్తారు, కానీ ...

VITவிழா

Image
வேலூர்   17-5-25    வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் ஸ்டார் திட்ட நாள் விழாவில் மதுகடைகள் மூலம் சமுதாயம் சீரழிகிறது திரைத்துறையினரும் மது அருந்தும் காட்சிகளை காட்ட கூடாது என முன்னாள் மாணவி பேச்சு - கல்வி  ஒன்று தான் மாணவர்கள் வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றும் விவசாயம் செய்யவும் இளைஞர்கள் முன் வரவேண்டும் நடிகர் கார்த்தி பேச்சு  ____________________________________________      வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடியில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் மாணவ,ஒரு மாணவனை இவர்களை படிக்க வைக்கும் ஸ்டார் திட்டமான 8 ஆம் ஆண்டு மாணவர் சந்திப்பு கூட்டம் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர் கார்த்தி மற்றும் பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் சேகர்,காதம்பரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள் இதில் முன்னாள் மாணவி மதுரையை சேர்ந்த மாலதி பேசுகையில் பெரும்பாலான மாணவ,மாணவிகள் தாயின் வளர்ப்பில் தான் வளர்ந்து முன்னோற்றம் அடைகிறோம் அதற்கு முக்கிய காரணம் மது தான் ...

தரிசனம்

Image
உலகப் புகழ்பெற்ற குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அம்மனை தரிசிக்க வருகை தந்து சிறப்பித்த முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் கே.சி. வீரமணி, மாவட்ட கழகச் செயலாளர் த.வேலழகன் ஆகியோர்  பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தனர்.

செய்திகள்

Image
 ராணிப்பேட்டைமாவட்டம்      15-5-25 அரக்கோணத்தில் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆவேசம்.திருப்பதி - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரத்தில் நேற்று இரவு 12 மணிக்கு மேல் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. கோடைகால வெப்பம் நிலவி வருவதாலும் சுமார் ஐந்து மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையான அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் வின்டர்பேட்டை பகுதியில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மின்சாரம் துண்டிக்கப்பட்டவை கண்டித்து திடீரென திருப்பதி -காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தைக்கு பின் மின்சாரம் சீர் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.இதனை அடுத்து மறிலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதன் காரணமாக திருப்பதி கா...