முகத்துக்குமுன்னால்
_*முகத்துக்கு*_
_*முன்னால்*_
_*முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு ஒன்று நெருங்கி வாழ முடியாது.*_ _*அவற்றில் காணப்படும் முட்கள் காரணமாக எதிரிகள் மட்டுமல்ல,*_ _*சொந்த குட்டிகளைக் கூட*_
_அரவணைக்க முடியாது._
_*குளிர்காலம் வந்து விட்டால் முட்களின் குத்துக்களை தாங்கிய வண்ணம் அவைகள் வெப்பத்தைத் தேடி நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.*_
_வெப்பம் கூடும் போது குளிர்ச்சியை தேடி_
_தூரமாகிவிடும்._ _இப்படியே கிட்ட வருவதும் தூர செல்வதுமாக அவைகளின் குளிர்கால_
_*இரவுகள் கழிகின்றன.*_
_அதிகம் நெருங்குவதால் காயங்கள் அதிகரிக்கும், அதிகம் விலகுவதால் உயிருக்கு ஆப்பத்தாகிவிடும்._
_*மனிதர்களுடான நமது உறவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம்மில் யாரும் முட்கள் இல்லாதவர்கள் இல்லை.*_
_வலிகளை சுமக்காமல் உறவுப் பாலத்தை கட்டியமைக்க முடியாது._
_*குறைகள் இல்லாத நண்பனை தேடியவன்*_
_காலமெல்லாம் தனித்து வாழ வேண்டி வரும்._
_*குறைகள் இல்லாத துணையை தேடியவன்*_
_காலமெல்லாம் திருமணம் முடிக்காமல் வாழ வேண்டி வரும்._
_*சச்சரவு இல்லாத சகோதரன் தேடியவன்*_
_காலமெல்லாம் தேடிக்கொண்டே இருப்பான்._
_*குறைகள் இல்லாத உறவினர்களை எதிர்பார்த்து வாழ்பவன் காலமெல்லாம் உறவுகளை துண்டித்து வாழ வேண்டி வரும்.*_
_குறைகளையும், பிழைகளையும் சுமக்காமல் வாழ்க்கை வண்டி நேராக பயணிக்காது._
_*மகிழ்ச்சியாக வாழ விரும்பினால்*_
_எல்லாவற்றுக்கும் விளக்கம் தேடிப் போகாதீர்கள்._
_*எல்லாவற்றையும் அலசி ஆரயாதீர்கள். எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யதீர்கள்.*_
_மாணிக்கமா, மரகதமா என்று தேடிப் பார்த்தவனுக்கு சுட்ட செங்கல் என்று தெரிய வந்த கதை போல் ஆகிவிடும்._
_*யாரையும் அளவுக்கதிகம் தெரிந்தது கொள்ள முற்படாதீர்கள்.*_
_முகத்துக்கு முன்னால்* எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதோடு நாம் நின்றுகொள்வது நமக்கு நல்லது._
🌹
Comments
Post a Comment