நண்பன்

_*வாழ்க்கை என்னும் அருவியில்*_
_*கவலைகள் என்னும் அணைகள் உண்டு...*_ 
_*குறிக்கோள் என்னும் பாதையில் கரை புரண்டு நீ சென்றால்,*_
_*கஷ்டங்கள் என்னும் கல் பாறைகளைத் தாண்டி, கடலென்னும் வெற்றி உனக்குண்டு.*_

_கடவுளை விடச் சிறந்த நண்பன் யாரும் இல்லை. நம் உடலை விட நமக்கு நெருங்கியவன் இறைவனே. மிக அருகில் உள்ளவற்றை அடையாளம் காண்பது சிரமம்தான்._

_*நம்மை தினமும் பாதுகாக்கும் ஆத்ம பந்து  சர்வேஸ்வரன் ஒருவனே. பிறவிகள் கழிந்தாலும் ஜீவனை விடாத பந்தம் இறைவனுடையதுதான். இந்த உண்மையை அறியாமல் உழன்று கொண்டிருக்கிறோம்.*_

_நண்பன் எது செய்தாலும் நம் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை இருந்தால் தைரியமாக இருப்போம். அதிலும் சாதாரண நண்பனா இறைவன்_

_*நம்மை முன்னும் பின்னும் அறிந்தவன். முக்காலமும் உணர்ந்தவன்.*_

_நம்மைவிட நம்மைப் பற்றி தெளிவாகத் தெரிந்தவன். யாரோ ஒருவருக்கு மட்டுமே நண்பன் அல்ல இறைவன்..._

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்