மீன்
வலையில் அகப்பட்ட மீன் எந்த வழியாக சென்று மாட்டிக்கொண்டதோ, அந்த வழியாகவே தப்பி விடலாம். ஆனால் அது நீரின் சலசல ஒலியில் மகிழ்ந்து மற்ற மீன்களோடு களித்தபடி எல்லாவற்றையும் மறந்து விடுகிறது. தப்புவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. மனைவி மக்களின் கொஞ்சல் மொழிகள் தான் நீரின் சலசல ஒலி, உறவினர்களும் நண்பர்களும் தான் வலையில் சிக்கியிருக்கும் மற்ற மீன்கள். ஆனால் ஓரிரு மீன்கள் தப்பி விடுகின்றன. இவர்களே ஜீவன் முக்தர்கள்
*ஸ்ரீ ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்ரம்*
🌹 அத கல்பம் ப்ரவக்ஷ்யாமி ஹயக்ரீவஸ்ய
பஞ்ஜரம் ,
யஸ்ய விஜ்ஞாந மாத்ரேண வாணீ கங்கேவ நிஸ்ஸரேத்
சுத்த ஸ்படிகஸங்காசம் துஷாராசல ஸந்நிபம் !
ச்வேத பர்வத ஸங்காச சந்த்ர மண்டல மத்யகம் !!
சதுர்புஜ முதாராங்கம் புண்டரீகாயதேக்ஷணம்
சங்கசக்ரதரம் தேவம் ஸ்ரீ வத்ஸாங்கித வக்ஷஸம் !!
கௌஸ்துபோத்பாஸிதோரஸ்கம் வநமாலாவிராஜிதம் !
பீதாம்பரதரம் தேவம் கிரீட மகுடோஜ்ஜ்வலம் !!
🌷 *இந்த பஞ்ஜர ஸ்தோத்ரம் 18 ஸ்லோகங்களை உடையது.*
*ஸ்ரீ கௌஸ்துபமாலையை தரித்தவரான ஸ்ரீ ஹயக்ரீவரை* *த்யானம் செய்தவண்ணம் இந்த பஞ்ஜர ஸ்தோத்திரத்தை ஜபிப்பவர்கள்* *விரும்பியவண்ணம் யாவும் கைகூடப்பெறுவர்* *என்பது பூர்வர்களின் ஆழ்ந்த அனுபவம்...*
மிருதுவான களிமண்ணில் எந்த உருவமும் பதியும். கருங்கல்லில் பதியாது. பக்தனுடைய இருதயத்தில் ஈசுவர ஞானம் தானே பதியும்; பந்தப்பட்ட ஜீவனுடைய இருதயத்தில் பதிவதில்லை - ஶ்ரீராமகிருஷ்ணர்
அம்மா எனக்குப் பசிக்கும்போது என்னை எழுப்பு என்று குழந்தை சொல்லிற்று; அதற்கு குழந்தாய்! உன் பசியே உன்னை எழுப்பிவிடும் என்று அதன் தாய் சொன்னாள்.அதேப்போல் இறையுணர்வும் தானே தோன்றுகிறது.
Comments
Post a Comment