காட்பாடியில் 13 வது முறை போட்டியிடும் துரைமுருகனுக்கு வரவேற்பு



வேலூர் காட்பாடியில் 13வது முறை போட்டியிடும் துரைமுருகன்: “வாக்காளர்களே தெய்வங்கள்” என பணிவான கோரிக்கை.

“செய்த பணிகள் மக்களுக்கு தெரியும்” – எதிர்க்கட்சிக்கு துரைமுருகன் பதில்

வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 13வது முறையாகவும், அதில் 11வது முறையாக காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிடவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் இன்று சென்னை நகரிலிருந்து ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்தார்.

அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்ற அவர், அண்ணா, பெரியார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய துரைமுருகன், “காட்பாடி வாழ் தெய்வங்களுக்கு பணிவான வணக்கங்கள்” என தனது உரையை தொடங்கினார். 

“என்னை மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தலைவருக்கும், என்னை அன்புடன் வரவேற்ற உங்களுக்கும் என் நன்றி உங்கள் உற்சாகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை என்னை ஆதரித்த மக்கள், இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும்” என பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காட்பாடி தொகுதிக்கான திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, “எல்லா திட்டங்களும் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும்” என்றார்.

தனது மகன் கதிர் ஆனந்த் முதன்முறையாக மாவட்ட பொறுப்பாளராக தேர்தலை சந்திப்பது குறித்து, “அவர் பல ஆண்டுகளாக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்” என தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவரைப் பற்றி நான் பெரிதாக கருத்து கூற விரும்பவில்லை” என பதிலளித்தார்.

நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “எத்தனை போட்டி இருந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்” என்றார்.

மேலும், காட்பாடி தொகுதியில் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “நான் செய்த பணிகள் அனைத்தும் மக்களுக்கு நன்றாக தெரியும்” என உறுதியாக தெரிவித்தார்.


செய்தி
A. தினகரன்
செல்:9443403480

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்