3 பேர் பலி
சிப்காட் அருகே ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
சிப்காட் :
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே திருவிக நகரைச் சேர்ந்த நித்திஷ் பார்த்திபன் நித்திஷ் ஆகிய மூன்று தனியார் பள்ளி மாணவர்கள் மணியம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறதுஇந்நிலையில் மூன்று மாணவர்கள் கேரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவன் தற்செயலாக ஆழமான பகுதியில் சிக்கியதாக தெரிகிறது அந்த மாணவனை காப்பாற்ற மற்ற இரண்டு மாணவர்கள் உள்ளே சென்றபோது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்மூழ்கிய மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏரியின் அருகே சென்று நீரில் மூழ்கிய மாணவர்களை அடுத்தடுத்து மீட்டு சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் மாணவர்களின் உடலை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments
Post a Comment