செய்திகள்
வாணியம்பாடியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புனேவிலிருந்து 1200 போதை மாத்திரைகள் ரயில் மூலம் கடத்தி வரப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லும் முயன்ற கோவையைச் சேர்ந்த 6 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர் இந்த நிலையில் மீண்டும் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 500 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ்(24), திலீபன் (22) ஆகியோர் என தெரியவந்தது ஏற்கனவே போதை மாத்திரை கடத்தல் சம்பவத்தில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்துள்ளது வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
காட்பாடியில் தாராப்பபடுவேடு பகுதியில் உள்ள 11047 உள்ள டாஸ்மாக் மதுபான கடையை நேற்று இரவு பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி தற்பொழுது சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காட்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 11047 செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கடையை மூடி விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் ஆட்டோவில் மர்ம நபர் ஒருவர் வந்து கடையில் நோட்டமிட்டு சிசிடிவி கேமராவை மேல் பக்கமாக தூக்கி வெளிப்பக்கமாக கேட்டில் உள்ள பூட்டை உடைத்து ஷட்டர் பகுதியில் கம்பியால் தள்ளி உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தீடிரென அவ்வழியாக யாரோ வருவதை அறிந்து கொள்ளையடிப்பதை கைவிட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் தப்பித்து சென்றுள்ளார்.பின்னர் இன்று காலை அந்த வழியாக சென்ற நபர்கள் மதுபான கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையடிக்க முயற்சித்த அந்த மரபு நபர் யார் என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
இந்த நிலையில் தற்பொழுது கடையை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் கிரண்பூஷணம்
செல் 9943036638.
*அரக்கோணத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினரின் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.*
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு அரக்கோணம் எஸ்.ஆர். கேட் பகுதியில் இருந்து தொடங்கி, காந்தி சாலை வழியாக மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று, இறுதியாக கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை இராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Comments
Post a Comment