அன்னதானம்


தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சார்பில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவின் 
ஆறாம் நாள் 63நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 
19ஆம் ஆண்டு அன்னதானம்

வேலூர்
தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் சார்பாக  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய    பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்  63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 19ஆம் ஆண்டு அன்னதான விழா காஞ்சிபுரம் ஓங்கோல் சங்கர பத்தர் 16 கால் மண்டப சத்திரத்தில் நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன்  தலைமை தாங்கி அன்னதானத்தினை தொடக்க வைத்தார். 
காஞ்சிபுரம் மாவட்ட குழுவின் ஆர்.குமாரசாமி, க.சங்கரநாராயணன், எஸ்.சிவக்குமார்ஆகியோர்  அன்னதானம் வழங்கும் பணியினை               மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்      ஜி.கருணாகரன்,  குப்புசாமி, என்.ராஜேந்திரன், என்.அருண்குமார், ஜி.நரசிம்மன்,  எம்.சீனிவாசன், ஆகியோர்  அன்னதானம் வழங்கும் பணியினை ஒருங்கிணைத்தனர்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஆர்.பி.சதீஷ்,                                        டி. எம்.கதிர்வேலு,  டி.கே.ஜி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் ஆண்டுதோறும் நடைபெறும் 63 நாயன்மார்களுக்கான விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் ஆயிரம்          பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்