பாராட்டு விழா


வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பாராட்டு

வேலூர்:
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் பள்ளிக் கல்வித் துறையின் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இந்த கல்வியாண்டில் இறுதி நிகழவாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கருத்தாளர்களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் மார்ச் மாத மீளாய்வு வேலை அறிக்க சமர்பித்தல் மற்றும் கருத்தாளர்களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்கள் பங்கேற்று கருத்தாளர்களின் வேலை அறிக்ககளை ஆய்வு செய்தார் மேலும் அவர்களின் பணிகளை பாராட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட பாராட்டு கேடையங்களை வழங்கி பேசினார்.
 வேலூர் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி  உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் முத்து.சிலுப்பன், செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் வேலூர் கிளை செயலாளர் பா.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்தியும் பாராட்டியும் பேசினர்.   
வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் தலைமை தாங்கி பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன்  2025-26ஆம் கல்வியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகள் பரிசோதனைகள் குறித்து பேசினார்.  பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார்.
வானவில் மன்ற கருத்தாளர்கள் என்.சரஸ்வதி, என்.வெண்ணிலா, கே.ஷகிலா, இ.பரிமளா ஆர்.முகமதுபாஷா, ஆர்.கோகுல், எஸ்.பிங்கிஷெல்சியா, எஸ்.தமிழ்வாணன், யு.சுருதி, எஸ்.கார்த்தி, பி.வினோத், ஆர்.சங்கவி, எம்.ஜமுனா, ஆர்.அருணா, இ.பரிமளா ஆகிய கருத்தளார்கள் வேலை அறிக்க சமர்பித்தனர் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராட்டு கேடையம் வழங்கப்பட்டுது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்