வராதே




 
 புங்கம்பட்டு நாடு பகுதியில் தயவுசெய்து எங்க ஊருக்கு ஓட்டு கேட்க வரவேண்டாம் என வினோத பேனர் 


திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, பொதுமக்கள் வினோத பேனர் ஒன்று வைத்தனர் அதில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் தயவு செய்து யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனவும் போலியான மற்றும் அரசு அங்கீகரிக்கப்படாத பழங்குடியினர் அல்லது வழங்கிய போலி ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் போலிச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 80ஆண்டு காலமாக எங்கள் ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ளது வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் குடிநீர் வசதி வேண்டும் நியாய விலை கடை வேண்டும்,மேலும் ஜவ்வாது மலை பல்வேறு பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லை, மேலும் போலியானவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர் அதனை ரத்து செய்ய பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லைஎனவே தயவு செய்து எங்க ஊருக்கு ஓட்டு கேட்க யாரும் வர வேண்டாம் என வினோத பேனரை வைத்துள்ளனர். 


Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்