செய்திகள்
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் டார்க் ரூமில் வைத்து சீல் வைத்த தேர்தல் நடத்தும் அலுவலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில்குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு கருவி விவிபேட் உள்ளிட்டவைகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக திமுக பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் குடியாத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்த்து டார்க் ரூமில் சீல் வைக்கப்பட்டது
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னனுவாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழகத்தில்அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது இதற்காக மின்னனு
வாக்குபதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் உள்ள மஞ்சள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் 300 பூத்துகளுக்கு, 360 வாக்குபதிவு இயந்திரங்கள், 390 விவிபேட் இயந்திரங்கள் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது . தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷன் குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோகன், ரேவதி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டு மின்னணு வாக்கு இயந்திர பெட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
குடியாத்தம் அருகே பனை மரத்தின் மீது மின்கம்பி உரசி மளமளவென தீப்பற்றி எரிந்த பனைமரம்-
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் , குடியாத்தம் பள்ளிகொண்டா செல்லும் சாலையில் குடியாத்தம் ரயில்வே நிலையம் அருகே மின்கம்பி உரசியதில் பனைமரம் மள மள வென தீப்பற்றி எரிந்துள்ளது தனை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பனைமரம் எரிவது குறித்து குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
குடியாத்தம் புகழ்பெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் ஸ்ரீ அருள்மிகு கெங்கை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ம் தேதி சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்இதில் ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இதனிடையே இந்த ஆண்டு சிரசு திருவிழா வரும் மே மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது இந்த ஆண்டு சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்சிரசு திருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் சுற்றி பால் கம்பம் பக்தர்கள் ஆரவாரத்துடன் எடுத்துவரப்பட்டு பால் கம்பம் நடப்பட்டு பாலை ஊற்றி பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றதமுன்னதாக மூலவர் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை நடைபெற்றது இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம் அலுவலர்கள், பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் அதிக அளவில் திரண்டு வருவது காரணமாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் கடந்த சில நாட்களாக அலுவலக வளாகத்தில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக அலுவலகத்தின் முக்கிய நுழைவுப் பகுதி மற்றும் படிக்கட்டுகளில் கூட்டமாக அமர்ந்து கொண்டு, அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகின்றன.மேலும், முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் குரங்குகள் தங்கியிருப்பதால் மேலே செல்ல முயலும் நபர்களையும், கீழே இறங்கும் நபர்களையும் வழியிலேயே தடுத்து நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளது.சில நேரங்களில் குரங்குகள் திடீரென முன்வந்து பயமுறுத்துவதால், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் அதிக அச்சத்தில் உள்ளனர்.இந்த நிலை காரணமாக அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதுடன், தினசரி பணிகளுக்காக வரும் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குரங்குகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பாக செயல்பட உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே நெல் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!.மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு போலீசார் விசாரணை.*
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி சின்னாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தசெல்வம் மனைவி ஜோதி (50) என்பவர் அதே பகுதியில் சரசு என்பவரின் நிலத்தில் நெல் அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஜோதி வேலை செய்து கொண்டிருக்கும் போது நெல் அடிக்கும் இயந்திரத்தில் புடவை சிக்கியதில் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூரில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது இதில் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று அச்சமின்றி வாக்களிப்போம் ஜனநாயக கடமையாற்றுவோம் என கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி சத்துவாச்சாரி உள்ளிட்ட நகரின் முக்கியவீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்து மாணவர்களுடன் அவரும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
*எனது வாக்கு எனது உரிமை தேர்தல் விழிப்புணர்வு லோகோவை அறிமுகப்படுத்திய ஆட்சியர்*
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் விழிப்புணர்வு எனது வாக்கு எனது உரிமை என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவசௌந்தரவல்லி திறந்து வைத்தார்.
பின்னர் பேசுகையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆக வேண்டும் எனது வாக்கு எனது உரிமை நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினார்.
உடன் இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் கனகுசாம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் கோவில் 108 குட பாலபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கனககுசம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு அருள் சித்தி விநாயகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி ஆறாம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. நிறைவு நாள் இன்று சோழபுரீஸ்வரர் ,கனககுசம்பாள் சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது தோப்புளம்மன் கோவில் இருந்தது சிறப்பு பூஜை செய்யப்பட்டு பம்பை மேகங்கள் முழுங்க 108 பெண் பக்தர்கள் பால் கூடத்தை தலையில் சுமந்து படி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மூலவர் சோழபுரீஸ்வரர், கனககுசம்பாள் சுவாமிக்கும் நடராஜன் சுவாமிகள் பால் அபிஷேகம் செய்தார்.தொடர்ந்து கலச பூஜை 108 சங்கு பூஜை 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாக பூஜை செய்து மூலவர் சுவாமிக்கு கலசம் மற்றும் சங்கில் இருந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
காட்பாடியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேர்தல் ஆணயத்துடன் இணைந்து 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
காட்பாடி:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 23.04.2026 இல் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியானது இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், ஆர் ஐ சி டி கல்வி நிறுவனம் வேலூர் மாவட்ட இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் மற்றும் காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறன் துவக்கி வைத்தார். டி கே எம் கல்யாண மண்டபம் அருகில் இருந்து புறப்பட்டு சில்க் மில் சந்திப்பு காங்கயநல்லூர் சாலை வழியாக மீண்டும் கல்யாண மண்டபம் அருகில் நிறைவு பெற்றது.
காட்பாடி ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் மாணவமாணவிகள் கைகளில் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வாக்களிக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்
ராணிப்பேட்டை மாவட்டம்
செய்தியாளர் கிரண்பூஷணம்
செல் 9943036638.
*அரக்கோணத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி – பாதுகாப்பு குறைவு காரணமாக திருநங்கைகள் அவதி*
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், திருநங்கைகள் பொதுமக்களுக்கு கைப்பிரதிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அரக்கோணம் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, காந்தி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.
வழியெங்கும் பொதுமக்களுக்கும், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பேரணிக்கு காவல்துறையினரின் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், வாகனங்களுக்கிடையே திருநங்கைகள் சிக்கி கடும் அவதிக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment