பறிமுதல்
சேர்க்காடு சோதனை சாவடியில்
தெலுங்கானா ஐ.டி ஊழியரிடம் ரூ 2.41 லட்சம் பறிமுதல்
வேலூர்
வேலூர் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், பங்கல பெட்டாவை சேர்ந்தவர் சங்கர் ரெட்டி (வயது 40). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியா நிறுவனத்தில் ஐ.டி ஊழியராக வேலை செய்து வருகிறார். தனது மகனின் திருமணத்திற்காக பட்டு புடவை, வேஷ்டி சட்டை வாங்குவதற்காக குடும்பத்தினருடன் காரில் காஞ்சிபுரத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.
காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 1:30 மணிக்கு அந்த வழியாக வந்த சங்கர் ரெட்டியின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரூ 2 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது. காரில் இருந்த பணத்திற்கு சங்கர் ரெட்டியிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் பறிமுதல் செய்த பணத்தை நிலை கண்காணிப்புக்கு அலுவலர் சதீஷ்குமார் காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறனிடம் ஒப்படைத்தார்.
மகனின் திருமணத்திற்கு உடைகள் வாங்க இந்த பணத்தை எடுத்து வந்ததாகவும், பணத்தை திருப்பி தருமாறு சங்கர் ரெட்டி அதிகாரிகளிடம் பலமுறை கெஞ்சி கேட்டும் தரவில்லை. பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் செய்வது அறியாது திகைத்து நின்றார். தேர்தல் அதிகாரிகள் பணத்தை திருப்பி தர மறுத்ததால் சங்கர் ரெட்டி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றார்.
காட்பாடி அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த ரூ.5 லட்சம் பறிமுதல்
காட்பாடி:
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஆங்காங்கே நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை நான்கு ரோடு பகுதியில், நிலை கண்காணிப்பு குழு அதிகாரி லட்சுமி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் சோதனை செய்தனர்.அவர்களிடம் அப்பொழுது ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் சிக்கியதுவிசாரணை நடத்தியதில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் செட்டி தாங்கள் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பாபு என்பது தெரியவந்தது. அவரது காரைச் சோதனையிட்டபோது, அவரிடம் முறையான ஆவணங்கள் இன்றி 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தல் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட அந்தப் பணத்தை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாணியம்பாடி அருகே நகை வாங்குவதற்காக உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான வெலதிகாமணி பெண்டா சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ஆர்மணிபெண்டா பகுதியை சேர்ந்த அமராவதி வெங்கடேசன் தம்பதியினர் தங்களது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் நகை வாங்குவதற்காக உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்ணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர்
கர்நாடகாவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 6.0 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
வேலூர்
கர்நாடகா மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பட்டுப் புடவை வாங்க எடுத்துவரப்பட்ட பணம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம்.தமிழக சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது இதனிடையே குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனிடையே குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி பகுதியில் பறக்கும் படையினர் வாகனதனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்அப்பொழுது கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 6.0 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர் மேலும் விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம் தூம்கூர் பகுதியை சேர்ந்த சென்னாகவுடா என்பதும் திருமண விசேஷத்திற்காக பட்டுப் புடவைகள் வாங்க காஞ்சிபுரத்திற்கு செல்ல பணத்தை எடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததுமேலும் பறிமுதல் செய்யப்பட்ட 6. லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி
போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க,த.வெ.க.வினர் மீது வழக்கு
வேலூர்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் விதிமுறையை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும்,தாலுகா போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும்,குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அ.தி.மு.க.வினர் மீது 4 வழக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது ஒரு வழக்கும்,கடை திறப்பு விழாவுக்கு போஸ்டர் ஒட்டிய ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்பாடியில்
ரூ.2.35 லட்சம் பணம் பறிமுதல்
வேலூர்
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரச மங்கலம் பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கொணவட்டம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் பிரசாத் (வயது21) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் 1.35 லட்சம் இருந்தது காரில் இருந்த பணத்திற்கு உண்டான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறினம் ஒப்படைத்தனர்.
இதே போல் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றை அடுத்த முத்தரிசி குப்பத்தில் தேர்தல் பழக்கம் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெங்களூர் சேர்ந்த ரமணா என்பவர் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க காரில் வந்தார். அவரது காரை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. வனத்துக் கொண்டான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment