அதிமுக கூட்டணிக்கு கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


அதிமுக கூட்டணிக்கு கேரண்டியும்
கிடையாது வாரண்டியும் கிடையாது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேச்சு 

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே திராவிட முன்னேற்றக் கழக வந்தவாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். அம்பேத்குமார் அவர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது ஜாடிக்கேத்த மூடி என்பது போல மோடிக்கு ஏத்த ஜடியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்றும் அதிமுக கூட்டணிக்கு கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது இப்போது நடைபெறுகின்ற தேர்தல் டெல்லிக்கா தமிழ்நாட்டுக்கா என்ற தேர்தல் அதில் நாம் வெற்றி அடைய வேண்டும் நீங்கள் எப்போதே முடிவு எடுத்து விட்டீர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்துள்ளது மகளிர் விடியல் பயண திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இவை உள்பட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்துள்ளது மேலும் திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டம் செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் கேரன்டி இல்ல கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு தங்களது வீடுகளுக்கு பக்கத்தில் உள்ள கடைகளில் வாஷிங் மெஷின் குக்கர் போன்ற பல பொருட்கள் வாங்கிக் கொள்ள ரூபாய் 8000 கூப்பன் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் மேலும் இது இல்லாமல் என்னற்ற வாக்குறுதிகளை திராவிட மாடல் அரசு கூறி உள்ளது அந்தத் திட்டங்கள் எல்லாம்  நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அம்பேத்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்