ஊர்வலம்
வேலூரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க குதிரைகளுடன் ஊர்வலம்
வேலூர்
வேலூர்மாவட்டம்,வேலூர் பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள சம்பவ்நாத ஜெயின் ஆலயத்திலிருந்து இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள் பின்னர் குதிரைகளுடன் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவ படம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து குதிரைகள் முன்னர் செல்ல மேளதாளங்ககுடன் நடனமாடிய படி ஜெயின் சமுதாய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாடல்களை பாடிய படி ராஜேஷ்குமார் ஜெயின் தலைமையில் பிரகாஷ் ஜெயின் ஊர்வலத்தை துவங்கி வைக்க ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக வேலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது இந்த ஊர்வலத்தில் ஜெயின் மதகுரு பக்தி ரத்னா சுரிஷ் சர்ஜி உள்ளிட்ட திரளான ஜெயின் சமுதாயத்தினர் பங்கேற்று உயிர்களை கொல்ல கூடாது மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இந்த ஊர்வலமானது காந்திரோடு,பி.எஸ்.எ.ஸ்கோவில் தெரு வழியாக மீண்டும் ஜெயின் ஆலயத்தில் நிறைவடைந்தது
செய்தியாளர் கிரண்பூஷணம்
செல் 9943036638.
*அரக்கோணத்தில் ஜெயின் சங்கத்தின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.*
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஜார் தெருவில் நடைபெற்ற இந்த விழாவில், மகாவீரரின் 2625ஆம் ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு அவரது படத்திற்கு ஜெயின் சங்கத்தினர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மனிதநேயத்தை முன்னிறுத்தும் வகையில் ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜெயின் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அன்னதானத்தில் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பங்கேற்று உணவு பெற்றனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜெயின் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments
Post a Comment