தேர்தல் விழிப்புணர்வு வாசகம்
வேலூரில் 100 சதவிகிதம் வாக்குபதிவு வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மலர்களால் மை வோட் மைப்யூச்சர் என வடிவமைத்து 100 சதவிகிதம் வாக்களிப்பை விழிப்புணர்வு செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு ஊர்வலம் - வேலூரில் 100 சதவிகிதம் வாக்களிப்பை அனைவரும் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை வெளி பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையத்தின் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தி வண்ண மலர்களை கொண்டு 100 சதவிகிதம் வாக்களிப்போம் மை வோட் மை ப்யூச்சர் வேலூர் என வடிவமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர் இதில் 100 சதவிகிதம் வாக்களியுங்கள் இப்படிக்கு வேலூர் கோட்டையன் என்ற எறும்பு திண்ணியின் விழிப்புணர்வு வீடியோவை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார் மேலும் கோட்டை வெளிபூங்காவிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் கையில் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு பேரணி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி வேலூர் கோட்டையன் என்ற எறும்பு திண்ணி மஸ்கட்டை வெளியிட்டுள்ளோம் நமது மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்கபதிவாக அனைவரும் காட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென பேசினார்
Comments
Post a Comment