பறிமுதல்


 பேரணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 5 டன் கல் கம்பங்கள் மினி லாரி பறிமுதல்- பேரணாம்பட்டு போலீசார் விசாரணை

பேர்ணாம்பட்டு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தலபள்ளி தமிழக ஆந்திர எல்லை வன சோதனை சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி பாறை கற்கள் ஏற்றி வருவதாக வேலூர் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வள த்துறை அலுவலகத்திற்கு வந்த தொடர் புகரை அடுத்துஇன்று பேரணாம்பட்டு வி. கோட்டா செல்லும் சாலையில் கனிமவளத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி பாறை கல் கம்பங்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது மேலும் அதிகாரிகளை கண்டதும் லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் கல் கம்பத்துடன் மினி லாரியை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் கனிம வளத்துறையினர்  ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்