1டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.3 பேர் கைது, நகர காவல்துறையினர் நடவடிக்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகே நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில், ஆந்திரா மாநிலத்திற்கு 1 டன் ரேஷன் அரிசி கடத்திச்செல்வது தெரியவந்துள்ளது. உடனடியாக வாகனத்துடன் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம். பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த கோபி, சித்திக் பாஷா, முஹம்மத் அலி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment