8 கிலோ கஞ்சா பறிமுதல்




குடியாத்தத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்,கஞ்சா கடத்தி வருவதற்கு  கஞ்சா வழக்குகளில் சிறையில் இருப்பவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் சிறையில் இருப்பவரின்  வீட்டில் நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் மனைவி உள்பட  இரண்டு பேர் கைது 


வேலூர்
 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் நேரு நகரை சேர்ந்தவர் சம்சுதீன் இவரது மகன்கள் முபாரக் வயது 30,அமீர் உசேன் வயது 23 ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணன் தம்பி தொடர்ந்து கஞ்சா விற்று வழக்கில் கைது செய்யப்பட்டதால் இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.சிறையில் இருந்தபடியே முபாரக் சிறையில்உள்ள போதை பொருட்கள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன்  நட்பு ஏற்படுத்திக் கொண்டு மெத்தபைட்டமன் போதை பொருளை வெளி மாநிலத்திலிருந்து வரவழைத்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் குடியாத்தம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது இதன் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர்.சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரி முபாரக் சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதுபுகார்களை தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி வரதராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் பொறுப்பு கேத்தரின் மேரி, கிராமிய காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் முபாரக் குடும்பத்தினரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அப்போது ஆந்திராவில் இருந்து முபாரக் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் மேம்பாலம் அருகே  காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்து பிடித்து தீவிரமாக சோதனை செய்த போது அதில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது 
இருசக்கர வாகனத்தை நிறுத்தியதும் அதில் பின்னால் அமர்ந்து வந்த முபாரக்கின் தந்தை சம்சுதீன் ஓடிவிட்டார்.இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குடியாத்தம் ஷெரிப் நகர் நாலாவது தெருவை சேர்ந்த நாதன் மகன் சிவா என்கிற அர்மான் சிவா வயது 30 என்பவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர் விசாரணையில் ஆந்திர மாநிலம் காலவபல்லி பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும் அந்தக் கஞ்சாவை முபாரக்கின் தந்தை சம்சுதீனும் முபாரக் மனைவி சம்ரீன் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது இதனைத் தொடர்ந்து தனிப்பட்டடையினர் முபாரக் வீட்டில் திடீர் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டஇதனை தொடர்பாக முபாரக் மனைவி சம்ரீன் ( 25) என்பவரை போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவம் தொடர்பாக சிவா என்கிற அர்மான் சிவா மற்றும் முபாரக் மனைவி அம்ரின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முபாரக் மற்றும் அவரது தந்தை சம்சுதீன் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
சிறையில் இருந்தபடியே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முபாரக் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்