மிரட்டல்
வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு
வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
வேலூர்,ஏப்.28-
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்று பகல் 12 மணி அளவில் வெடித்து சிதறும் என நேற்று இரவு கலெக்டர் அலுவலக ஈமெயில் முகவரிக்கு ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.
இன்று காலை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கலெக்டரின் இமெயில் ஐடியை திறந்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மோப்ப நாய் ரீட்டா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வளாகம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கணக்கு அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீண்டும் வெடிகுண்டு விரட்டல் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் களத்தில் அலுவலக ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment