மிரட்டல்



 

வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

வேலூர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்று பகல் 12 மணி அளவில் வெடித்து சிதறும் என நேற்று இரவு ஆட்சியர் அலுவலக ஈமெயில் முகவரிக்கு மெயில் வந்துள்ளதுஇன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் ஈமெயிலை பார்த்தபோது அதில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பது தெரியவந்தது உடனடியாக அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்தகவலின் பேரில் மோப்ப நாய் ரீட்டா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீண்டும் வெடிகுண்டு விரட்டல் எடுக்கப்பட்டுள்ள சம்பவம்  அலுவலக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்