எரித்து கொலை?


 
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சென்னை பாடியை சேர்ந்தவர் என விசாரனையில் தகவல்

அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே யார்டில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுமார் 30 வயது நபர் சென்னை பாடியை சேர்ந்தவர் என ரயில்வே போலீஸ் முதற்கட்ட விசாரனையில் தகவல்.அரக்கோணம் ரயில் நிலைய யார்டில் கடந்த ஏப்ரல் 11ம் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து எரித்து கொல்லப்பட்ட நபர் யார்  எதற்காக எரிக்கப்பட்டார் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா  என்கிற கோணத்தில் விசாரனை மேற்கொண்டனர்கள். இந்நிலையில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சென்னை அம்பத்தூர் அடுத்த பாடியை. அடுத்த மண்ணூர் பேட்டையை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் செய்யத் அப்துல் கரீம்(40) என்பது தெரிய வந்தது. இவர் முன்விரோதம் காரணமாக ஏரித்து கொல்லப்பட்டாரா  அல்லது வேறு காரணங்களா எரித்து கொன்றவர்கள் யார் என்கிற கோணத்தில் அரக்கோணம் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்