கணித திருவிழா


*கணக்கும் இனிக்கும் - கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா 2026*

வேலூர்
ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் இன்று 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா பயிற்சி முகாம் நடைபெற்றது. 
குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவுனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர்  தலைமை தாங்கினர். முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார்.   நிகழ்வுகளை மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி ஒருங்கிணைத்து பேசினார். 
மாவட்ட துணைத்தலைவர்கள் பேராசிரியர் டி.சசிகலா, சா.குமரன், வீரா.குமரன், இணை செயலாளர்கள்  பி.சுகுமாறன் வி.செல்வராஜ், கே வி குப்பம் கிளைச் செயலாளர் ஆர் வேல்முருகன்  காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர் இல. சீனிவாசன்  ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.திருநாவுக்கரசு குழந்தைகள் கணிதத் திருவிழாவை தொடக்க வைத்து சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது குழந்தைகள் கணித திருவிழா மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ஆலோசனை செய்து வருகிறோம் கணக்கும் இனிக்கும் என்பது குழந்தைகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் உற்சாகத்துடன் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தது மட்டுமல்லாமல் கணக்கு பயிற்சிகளை ஆர்வமாக பங்கேற்று விடை கண்டனர் எனவே இப்ப பயிற்சியினை அவ்வப்போது நடத்த ஆலோசனை செய்து வருகிறோம் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர் பாராட்டுக்கள் என்றார் குழந்தைகள் நூல் எழுத்தாளர் விழியன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோபால ராஜேந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.பே.அமுதா, ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
அறிவுத்தோட்டத்தின் இணை நிறுவனர் எஸ்.குணசுந்தரி, மேலாளர் எம்.சத்தீஷ், வேளாண் பயிற்சியாளர் மாலதி காட்பாடி கிளை செயலாளர் ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  
 பயிற்சி கருத்தாளர்கள் ஹரிவராசன் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சிந்தியா கதை சொல்லி இந்தி ராணி கணித எழுத்தாளர் சரண்யா சிறப்பு கல்வி பயிற்றுனர் டாக்டர் ரேவதி உளவியல் ஆலோசகர் சக்தி செண்பகவல்லி கணித கதை சொல்லி வி. அக்கா ஆர் உதயகுமார் ஆர் பழனிவேல் ஆகியோர் கருத்தாளர்களாக செயலாற்றி பயிற்சிகள் அளித்தனர் 
விழா ஒருங்கிணைப்பாளர் பா.ராஜேந்திரன் நன்றி கூறினார். 
முதல் நாள் நிகழ்வில் அறிவுத்தோட்டம் சுற்றும் நடைப்பயணம்,கணிதமும் மூளையின் ஆரோக்கியமும், கண்களை மூடி கணித வடிவியல் பயிற்சி, அளவீடுகள் குறித்த கலந்துரையாடல், கணிதப் பேச்சு, கணிதக் கதைகள் கணித பாடல், காலநிலை மாற்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இரண்டாம்  நாள் பயிற்சி முகாமில்  குழுச் செயல்பாடுகள்,  தென்னை இலையில் கைவினை டாங்கிராம் மந்திரம் புத்தக வெளியீடு, கணித பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 75பேர் பங்கேற்றனர்.  மேலும் அவர்தம் பெற்றோர்கள் 25பேரும் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் கருத்தாளர்கள் நிர்வாகிகள் என 25 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்