செய்திகள்
குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு ஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு ஆட்டோ டிரைவர் கைது போலீசார் விசாரணை
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 53 ஆட்டோ டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் சதீஷ்,கிரிபிரசாத் இவர்களும் ஆட்டோ டிரைவர்கள் வெங்கடேசனுக்கும் சதீஷுக்கும் அவர்களின் ஆட்டோக்களை காலி இடத்தில் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது இந்தத் தகராறு எதிரொலியாக மாலையில் சதீஷின் தம்பி கிரிபிரசாத் வெங்கடேசன் உடன் வாக்குவாதம் செய்துள்ளார்இதன் தொடர்ச்சியாக கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி உள்ளார்இதில் தலை உள்ளிட்டது இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கத்தியால் சரமாரியாக வெட்டிய மற்றொரு ஆட்டோ டிரைவர் கிரிபிரசாத் வயது 29 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அதிகளவில் பரவி எரிந்து வருவதால் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
சமூக விரோதிகளால் வைக்கப்பட்ட தீயா என வனத்துறையினர் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வெள்ளகுட்டை மலையில் திடீரென ஏற்பட்ட காட்டுதீ முழுவதும் பரவி மளமளவென எரிந்து வருவதால் மலையில் உள்ள பறவைகள் வனவிலங்குகள் காட்டுத் தீயில் சிக்கி இறக்கும் மேலும் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமானது இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இரவு நேரம் என்பதால் அதிகளவில் பரவி எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டதா என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சோளிங்கர்:
இதனை முன்னிட்டு பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து பட்டு வஸ்திரம் தங்க ஆபரணங்கள் மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தோசிதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க சன்னதி தெரு சுப்பாராவ் தெரு, பைராகி மடத்தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு ஆகிய 4 மாட வீதி உலா வந்து பொதுமக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். முன்னாள் எம்எல்ஏகள் முனிரத்தினம், ஜி.சம்பத் , சு.ரவி, பாமக மாவட்ட செயலாளர் சரவணன் கோவில் உதவி ஆணையர் ராஜா ஆகியோர் வடம் பிடித்து தேர் வீதி உலா துவக்கி வைத்தனர்.சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தும் உப்பு மிளகு தேரின் மீது தூவி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி. வழிபட்டனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் தன்னார்வலர்கள் வழிநெடுக்க பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.
கே.வி.குப்பம் அருகே பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா- சிரசு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
கே. வி.குப்பம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கெங்கை அம்மன் கோவில் உள்ளது.ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15ஆம் தேதி கங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் வழக்கம் இந்த நிலையில் கீழ்ஆலத்தூர் கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றதுவேலூர் மாவட்டத்தில் முதல் கெங்கை அம்மன் கோவில் திருவிழா என்பதால் குடியாத்தம் கே.வி.குப்பம் காட்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்மேலும் பக்தர்கள் கெங்கைஅம்மனுக்கு மாவிளக்கு கற்பூரம் ஏற்றியும் சூறைத்தேங்காய் உடைத்தும் கெங்கை அம்மனுக்கு நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பாரம்பரியமான தாரை தப்பட்டை, மேளதாளங்களுடன் என சிலம்பாட்டம், நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது மேலும் சிரசு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
அரக்கோணம் அருகே காப்பர் வயர் திருடிய நபரை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மின்மோட்டார்களுக்கு பயன்படுத்தப்படும் காப்பர் வயர்கள் அவ்வப்போது திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மூர்த்தி மற்றும் அண்டை நிலத்துக்காரருக்கு சொந்தமான சுமார் 200 மீட்டர் நீளமான காப்பர் வயர் அறுத்து திருடப்பட்டதாக தெரியவந்தது.இதையடுத்து நில உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து புகை வருவதை கவனித்த அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒருவர் திருடிய காப்பர் வயரை தீ வைத்து எரித்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.அவரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால் சந்தேகம் அதிகரித்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆற்காடு மேற்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் எனவும் மேலும் இவர் அப்பகுதியில் காப்பர் மின் வயர்கள் திருடியது என தெரியவந்தது.மேலும், விக்னேஷ் மீது ஆற்காடு கிராமிய மற்றும் நகர காவல் நிலையங்களில் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாலாஜா சுங்கச்சாவடியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அடுத்த சென்னசமுத்திரம் கிராம மக்கள், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க தங்கள் பகுதிக்கு செல்ல வசதியாக தரைப்பாலம் அல்லது சிக்னல் உடனடியாக அமைத்து தர வேண்டும் என வாலாஜா சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர் கதையாகி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நடுவழியில் திடீரென பழுதாகி நின்ற அரசுபேருந்து - கொளுத்தும் வெயிலில் வேறு வழி இல்லாமல் காத்திருந்த பயணிகள் அவதி!
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நடுவழியில் திடீரென பழுதாகி நின்றதால், பேருந்தில் பயணித்த பயணிகள் கொளுத்தும் வெயிலில் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.சென்னையில் இருந்து வேலூர் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சரியாக வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென பழுதாகி நின்றது. கொளுத்தும் வெயிலில் பேருந்து பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கேள்வியே கல்வியின் அடிப்படை முன்னேற்றம் பயிற்சியை பயனுள்ளதாக்க சந்தேகமின்றி அதிகாரிகள் பயிற்சியை பெறுங்கள் சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி துவக்க விழாவில் கேரளா சிறைத்துறை தலைவர் பல்ராம் குமார் உபாத்யாயா பேச்சு
வேலூர்
வேலூர்மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில் இன்று 49 ஆவது சிறை அதிகாரிகளுக்கான மூன்று மாதங்கள் பயிற்சி துவக்க விழாவானது சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கேரள சிறைத்துறை தலைவர் பல்ராம் குமார் உபாத்யாயா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார் இதில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடக,கேரளா தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 32 சிறைத்துறை அதிகாரிகள் பயிற்சி பெறவுள்ளனர் 3 மாதங்கள் பயிற்சியில் அவர்களுக்கு சிறை கைதிகளை கையாளும் முறை புதிய சிறை சட்டங்கள் உள்ளிட்டவைகள் தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவைகள் பயிற்சி அளிக்கபடவுள்ளது
இவ்விழாவில் கேரள சிறைத்துறை தலைவர் பல்ராம் குமார் உபாத்யாயா பேசுகையில் சிறை அதிகாரிகளுக்கு இப்பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கைதிகளை மனிநேயத்துடன் நடத்துங்கள் மேலும் பயிற்சியின் போது மட்டுமல்லாமல் எப்போது எதில் சந்தேகம் என்றாலும் ஏன் எப்படி எவ்வாறு என வினாக்களை எழுப்புங்கள் நீங்கள் பயிற்சியில் அடையும் சந்தேகங்களை தெளிவு செய்ய எழுப்படும் வினாங்களே உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் கல்வியின் பயிற்சியின் முன்னேற்றமே கேள்வி தான் என பேசினார்
வாக்கு எண்ணும் மையத்தில் நடந்துகொள்ளும் விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேட்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது
வேலூர்
வேலூர்மாவட்டம்,வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர்,அனைக்கட்டு,காட்பாடி,கேவிக்குப்பம்,குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இதில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் நகராட்சி பேரூராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் இதில் கலந்துகொள்ள முடியாது மேலும் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகள் மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும் மற்ற இடங்களுக்கு செல்ல கூடாது வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சலிடவோ பிரச்சணை செய்ய கூடாது வேட்பாளர்களோ முகவர்களோ கைபேசி கொண்டு வர கூடாது வாக்கு எண்ணும் பணி முடிவடைந்தவுடன் குலுக்கல் முறையில் ஒவ்வொரு ஒரு தொகுதிக்கும் ஐந்து விவிபாட் இயந்திரம் தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள வாக்குகளும் எண்ணப்படும் இக்கூட்டத்தில் அதிமுக,திமுக,பாஜக,உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment