ஆந்திர அமைச்சர் தரிசனம்
ஆந்திரா மாநில முதலமைச்சர் மகனும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான நாரா. லோகேஷ் அவர்கள் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு..
அரக்கோணம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மகனும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நாரா. லோகேஷ் அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி யோக லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருகோவில் சார்பாக ஆணையர் ராஜா, அறங்காவலர் குழு தலைவர் ரவி குழு உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அவருக்கு கோவில் சார்பாக பட்டு வஸ்த்திரங்கள் மலர்மாலை அனிவித்து பிரசாதம் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் சிறிய மலை மீது படிகள் வழியாக ஏறிச்சென்று யோக ஆஞ்சநேயர் சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகன்மோகன், முரளி மோகன், புலிவர்த்தனி, திருப்பதூர் முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி , சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல். விஜயன் உடனிருந்தனர்.
Comments
Post a Comment