செய்திகள்
காட்பாடியில் பட்டப்பகலில் துணிகரம் ஐடி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளை
காட்பாடி
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை சி.என். ஜான் தெருவைச் சேர்ந்தவர் மதன் இவரது மனைவி காவியா தம்பதியினர் இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியாற்றி வருகின்றனர். மதன் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்திலும், காவியா வேலூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.வழக்கம் போல் கடந்த 11-ம் தேதி காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தங்களது பணிக்குச் சென்றுள்ளனர். இன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய காவியா வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். மேலும், தடைய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி (சிசிடிவி) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடியில் அரசு மதுபான கடையில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டிகளை வாங்கி சென்ற திமுக பிரமுகர் உட்பட இரண்டு பேர் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 225 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் அருகே வாணியம்பாடி நகர காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 225 மதுபாட்டில்கள் பதுக்கி எடுத்து சென்றது கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது அந்த இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை எடுத்து சென்ற நபர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்பதும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் இதில் மேட்டு பாளையம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜ்குமார் என்பவரும் தொடர்புடையதாக தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவர்கள் எடுத்து சென்ற 225 மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக அருண், மற்றும் திமுக பிரமுகர் ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே அரசு மதுபான கடையை ஆய்வு செய்ய வந்த டாஸ்மாக் அதிகாரிகள்
முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் சென்ற அதிகாரிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசு வந்தவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்ற தேர்தல் அறிவிப்பினை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதற்கட்டமாக தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி கோயில் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளுக்கு அருகில் செயல்படக்கூடிய 717 அரசு மதுபான கடைகளை அகற்றக்கோரி முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில் டாஸ்மாக் துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மதுபான கடைகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கிருந்த மதுபிரியர்கள் சிலர் அதிகாரிகளிடம் அன்புள்ள அரசு மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்தும் விஜிலாபுரம் பகுதியில் செயல்படும் மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்கள் பாட்டிலுக்கு கூடுதலாக 5 மற்றும் 10 ரூபாய் வசூலிப்பதாக அங்கு வந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் சென்றதால் மது பிரியர்கள் கடும் விரக்திக்குள்ளாகினர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முதல்வர் உத்தரவிட்டு பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெளடண்யா மகாநதி ஆற்றங்கரை ஒரம் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்இந்நிலையில் இந்த ஆண்டு இன்று வைகாசி 1 கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது முன்னதாக காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாநேற்று கெங்கையம்மன் தேர் திருவிழாவை தொடர்ந்து இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறதுமுன்னதாக தரணம்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் வரும் கெங்கையம்மன் சிரசை காண தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்மேலும் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்வழிநெடுகிலும் சூரத் தேங்காய் உடைத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்மேலும் பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்தும் புலி ஆட்டம் சிலம்பாட்டத்துடன் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர் இந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சிறப்பு பேருந்துகளும் இயக்கபடுகிறது
செல்போன் பேசியபடி ஒரு கையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர்! வீடியோ வைரல்!
வேலூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலம் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து நகர பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டிப்பட்டி கிராமத்தில் இருந்து திருப்பத்தூர் வரை இயக்கப்படுகிறது.இந்த நிலையில் வழக்கம் போல எட்டிபட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வரும்பொழுது காக்கங்கரை ரயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசியபடி ஒரு கையில் பேருந்தை ஓட்டிய சம்பவம் நடந்தேறியது. அதனை அருகே இருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவை செய்துள்ளார்
மேலும் பேருந்தில் பயணிகள் பயணிக்கும் நிலையில் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி
வேலூர்
தமிழ்நாடு முழுவதும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி உள்ள நிலையில் இன்று திடீர் காலையில் பெட்ரோல் போடச்சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் லாரி ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் திடீரென மூன்று ரூபாய் பெட்ரோல் க்கும் டீசலுக்கு மூன்று ரூபாய் என உயர்த்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளன எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியரை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர் தொழில் முனைவோர் மார்க்கெட்டிங் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் ஆகியோர் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அச்சமடைந்துள்ளனர் இதனால் மொத்த சுமையும் பொதுமக்களின் மேலே வந்து விழும் இதனால் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை வாபஸ் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் முந்தைய பெட்ரோல் விலை102.80 பைசா விளையில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது இன்றைய விலை ஏற்றத்தில்105.64 பைசா விலை உயர்ந்துள்ளது இன்றைய நிலையில் பெட்ரோல் விலை2.84 பைசா விலை உயர்ந்துள்ளது
இந்த நிலையில் டீசல் விலை பழைய விலை ஆனது94.39 பைசாவாக டீசல் விலை இருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ள டீசனின் விலை97.25 பைசாவாக கட் டீசல் விற்பனை நடைபெற்று வருகிறது இதனால் விலை அதிகமானது டீசல்2.86 பைசா அதிகரித்துள்ளது இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியதால் உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நாட்றம்பள்ளி அருகே புத்துக்கோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துக்கோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலய திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த திருவிழாவில் நாட்றம்பள்ளி வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து பால்குடம் எடுத்தும் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் இன்று காலை முதலே புத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. மேலும் புத்து மாரியம்மன் கரகம் வீடு வீடாக சென்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது கரகத்திற்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் இந்த திருவிழாவில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment