போராட்டம்
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திலிருந்து தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது என கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற கோரி ஆர்பாட்டம் மற்றும் போராட்டம்
வேலூர்
வேலூர்மாவட்டம்,வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டம் துவங்கியவுடன் அனைத்து விவசாயிகள் சங்கமும் தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவும் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பி வண்ணம் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்தனர் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் செய்ததுடன் விவசாயி தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது
ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திலிருந்து தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது என கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயத்தை காப்பாற்ற கோரி ஆர்பாட்டம்
______________________________________________________
ராணிப்பேட்டைமாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருவாய் அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டம் துவங்கியவுடன் அனைத்து விவசாயிகள் சங்கமும் தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவும் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பி வண்ணம் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்தனர் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் செய்தனர்
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து, தமிழக அரசின் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தில் குறு மற்றும் சிறு விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.தேர்தலுக்கு முன்பு, 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் அதிகபட்ச வரம்புகள் மற்றும் அடுக்குமுறை விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு, குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடன்களுக்கு வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர்.இதனால் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நாடகமாகவே உள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து விவசாயிகளின் பயிர்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
Comments
Post a Comment