தனியார் பஸ்சில் தீ
பொய்கை அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மீது தனியார் பேருந்து தீபற்றி எரிந்தது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரமாக போராடி தீயை அனைத்து வருகின்றனர்
வேலூர்
வேலூர்மாவட்டம்,பொய்கை கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஒரு சொகுசு பேருந்து வேலூருக்கு பேருந்தின் பாகங்களை உடைத்து எடுப்பதற்காக வந்ததை இதனை ஓட்டுநர் வினோத்குமார் ஓட்டி வந்தார் பொய்கை மேம்பாலம் அருகே வரும் போது திடீரென டயர் வெடித்து தீபற்றி எரிந்தது இதில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது ஓட்டுநர் வினோத்குமாரை பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர்தப்பினார் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை வேக வேகமாக அனைத்தனர் பாலத்தின் மீது பேருந்து தீபற்றி எரிந்ததால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் மேல் செல்லாமல் அனுகு சாலைக்கு பாதை மாற்றிவிடப்பட்டது இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment