இறந்தவர் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய ரூ 2000 லஞ்சம்

వెల్లూరు ఉడుకంపరై ప్రభుత్వ ఆసుపత్రిలో దిగ్భ్రాంతి

మృతుడికి పోస్ట్‌మార్టం నిర్వహించేందుకు రూ. 2 వేల లంచం తీసుకున్న ఉద్యోగి

సోషల్ మీడియాలో వైరల్ అయిన వీడియో

వెల్లూరు, జూలై 29-
శరవణన్ వెల్లూరు జిల్లాలోని ఒడుగత్తూరు సమీపంలో ఉన్న పలంపట్టు పంచాయతీలోని పత్తికొల్లై మలై గ్రామానికి చెందినవాడు. అతను రెండు రోజుల క్రితం ఎలుకల మందు తాగి మరణించాడు. అతని మృతదేహాన్ని పోస్ట్‌మార్టం కోసం ఉడుకంపరై ప్రభుత్వ ఆసుపత్రికి తరలించారు. అక్కడ పనిచేస్తున్న ఉద్యోగులలో ఒకరు, పోస్ట్‌మార్టం కోసం అవసరమైన సామాగ్రి కొనుగోలు చేసి, నిర్వహించడానికి డబ్బులు ఇవ్వాలని శరవణన్ బంధువులను కోరాడు.

మృతదేహాన్ని తీసుకువెళ్లడానికి వచ్చిన బంధువులు ఇప్పటికే దుఃఖం, మానసిక వేదనలో ఉండగా, వారి నుండి లంచం తీసుకోవాలని బలవంతం చేయడం కొండ ప్రాంత ప్రజలలో తీవ్ర అసంతృప్తిని కలిగించింది.

సామాజిక కార్యకర్తలు ఇలా అన్నారు:-

వెల్లూరు మరియు దాని చుట్టుపక్కల వివిధ ప్రాంతాలలో ప్రమాదాలు మరియు అసాధారణ పరిస్థితులలో మరణించిన వారి మృతదేహాలను పోస్ట్‌మార్టం కోసం అడుక్కంపరై ప్రభుత్వ ఆసుపత్రి మార్చురీకి తీసుకువస్తున్నారు.

పోస్ట్‌మార్టం పూర్తయిన తర్వాత మృతదేహాన్ని త్వరగా అప్పగించడానికి, స్నానం చేయించి సిద్ధం చేయడానికి అక్కడి ఒక ఉద్యోగి బాధితుల నుండి రూ. 2,000 తీసుకున్నాడు.

డబ్బు చెల్లించడానికి నిరాకరిస్తే, మృతదేహాన్ని అప్పగించడంలో ఆలస్యం చేస్తారని, అవమానకరంగా చూస్తారని బాధితుల కుటుంబాలు ఫిర్యాదు చేస్తున్నాయి.

పేదల దుస్థితిని ఆసరాగా చేసుకుని మృత్యువును రక్తపిపాసిగా అమ్మే ఈ పద్ధతిని సామాజిక కార్యకర్తలు తీవ్రంగా ఖండించారు.

అందువల్ల, జిల్లా యంత్రాంగం మరియు వైద్య కళాశాల ప్రిన్సిపాల్ తక్షణమే జోక్యం చేసుకుని తగిన చర్యలు తీసుకోవాలని అందరూ ఆశిస్తున్నారు. ఈలోగా, అక్
+
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி

இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் 

சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

வேலூர், ஜூலை.29- 
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள பலாம்பட்டு ஊராட்சி பட்டிக்கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்தார். அவரின் உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வேலை செய்யும் ஊழியர்களில்  ஒருவர் சரவணன் உறவினர்களிடம் பணம் கொடுங்கள், அப்போது தான் தேவையான பொருட்களை வாங்கி வந்து பிரேத பரிசோதனை செய்ய முடியும் என கேட்டுள்ளார். 
உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுச் செல்ல வரும் உறவினர்கள் ஏற்கனவே துக்கத்திலும், மனவேதனையிலும் இருக்கும் சூழலில், அவர்களிடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியது மலைவாழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில்:- 
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலிருந்து விபத்து மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் உயிரிழப்போரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை விரைவாக ஒப்படைக்கவும், உடலை குளிப்பாட்டி தயார் செய்து தரவும் அங்கிருக்கும் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் வாங்கி உள்ளார்.
பணம் தர மறுத்தால் உடலை ஒப்படைக்க தாமதம் செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இறப்பிலும் வியாபாரம் செய்யும் அவலம் ஏழை மக்களின் துயரத்தில் ரத்தம் உறிஞ்சும் செயல் என சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 
இதனால் மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் கல்லூரி முதல்வரும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையே ஆஸ்பத்திரி ஊழியர் லஞ்சம் வாங்கும் காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இறந்த வாலிபரின் உறவினரிடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பணம் வாங்கும் வீடியோ காட்சி.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்