கண்டன அறிக்கை
*கண்டன அறிக்கை*
*ராணிப்பேட்டை மாவட்ட பிரஸ் கிளப்*
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பணியாற்றி வரும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை *ராணிப்பேட்டை மாவட்ட பிரஸ் கிளப்* வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தங்களது கடமையை நேர்மையாகவும் அச்சமின்றியும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களையே கேள்விக்குறியாக்குகின்றன.
கருத்துச் சுதந்திரம் மற்றும் பணிச் சுதந்திரத்தை ஒடுக்க முயலும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, இத்தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல்துறையையும்
ராணிப்பேட்டை பிரஸ் கிளப் வலியுறுத்துகிறது
மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் உயிர் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் *செய்தியாளர் பாதுகாப்புச் சட்டத்தை* தமிழக அரசு* உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
செய்தியாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை *ராணிப்பேட்டை மாவட்ட பிரஸ் கிளப்* மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
*ராணிப்பேட்டை மாவட்ட பிரஸ் கிளப்*
Comments
Post a Comment