நகை திருடிய இரண்டு பெண்கள் கைது
பஸ்ஸில்
நகை திருடிய 2 பெண்கள் கைது! 8.5 சவரன் தங்க நகைகள் மீட்பு!
வேலூர்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, வேலூர் வடக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
வேலூர் சாத்துப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர் பெங்களூரிலிருந்து பஸ்சில் நேற்றுவேலூர் வந்தார். அவர் தனது கைப்பையில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகைகள், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இறங்கிப் பார்த்தபோது காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில், வேலூர் வடக்கு காவல் துறையினர் பஸ் நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நகைகளைத் திருடியது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (27) மற்றும் சவுந்தர்யா (29) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக இருவரையும் இன்று கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 8.5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் வேலூர் பெண்கள்சிறையில் அடைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் இவர்கள் ஆந்திர மாநிலத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் நிறைந்து நகை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது
: బస్సులో నగలు దొంగిలించినందుకు ఇద్దరు మహిళలు అరెస్ట్! 8.5 సవర్ల విలువైన బంగారు ఆభరణాలు స్వాధీనం!
వెల్లూరు
వెల్లూరు పాత బస్ స్టాండ్ వద్ద తరచుగా దొంగతనాలు జరుగుతున్నాయని ఫిర్యాదులు రావడంతో, వెల్లూరు ఉత్తర పోలీసులు నిశితంగా గమనిస్తున్నారు.
వెల్లూరులోని సత్తుపాలయం నివాసి అయిన దివ్య నిన్న బెంగళూరు నుంచి బస్సులో వెల్లూరుకు వచ్చింది. ఆమె వెల్లూరు పాత బస్ స్టాండ్ వద్ద దిగినప్పుడు, ఆమె హ్యాండ్బ్యాగ్లో ఉన్న 8.5 సవర్ల విలువైన బంగారు ఆభరణాలు కనిపించలేదు.
దివ్య ఫిర్యాదు ఆధారంగా, వెల్లూరు ఉత్తర పోలీసులు బస్ స్టాండ్ ప్రాంతంలోని సీసీటీవీ ఫుటేజీని పరిశీలించారు. పరిశీలనలో, తిరువన్నామలై జిల్లాలోని చెంగం సమీపంలో ఉన్న కట్టమడువు ప్రాంతానికి చెందిన మంజుల (27), సౌందర్య (29) అనే ఇద్దరు మహిళలు ఈ నగలను దొంగిలించినట్లు తేలింది.
పోలీసులు వెంటనే ఈరోజు వారిద్దరినీ అరెస్ట్ చేసి, వారి వద్ద నుంచి 8.5 సవర్ల విలువైన బంగారు ఆభరణాలను కూడా స్వాధీనం చేసుకున్నారు. అనంతరం, వారిద్దరినీ కోర్టులో హాజరుపరిచి, వెల్లూరు మహిళా జైలులో ఉంచారు. అరెస్టు అయిన ఇద్దరిపై ఇప్పటికే 50కి పైగా దొంగతనం కేసులు పెండింగ్లో ఉన్నాయి. వీరు ఆంధ్రప్రదేశ్లో ఆలయ ఉత్సవాల సమయంలో నగలు దొంగిలించే ముఠాకు చెందినవారని కూడా వెల్లడైంది.
Comments
Post a Comment