இரத்தினகிரி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
வேலூர் ஆக 6
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை
தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கருவறை மற்றும் அனைத்து சன்னதிகளிலும் வெள்ளிச் தேர் மயில் வாகனம், ரிஷப வாகனம், மூஷிக வாகனம், கல்தேர் உள்ளிட்ட வாகனங்களுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இத்திருவிழாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகளை தோளில் சுமந்தவாறு மேளதாளங்கள் மற்றும் வாத்திய இசையுடன் பக்தி பரவசமாக நடனமாடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவில் படிக்கட்டுகள் தோறும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள், கருவறையில் அருள்மிகு பாலமுருகனை தரிசித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும், திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
வேலூர் ஆற்காடு காட்பாடி ஆகிய பகுதியில் இருந்து நூறு சிறப்பு அரசுபஸ்கள் இயக்கப்பட்டது 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஏராளமான பக்தர்கள் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்
ఆషాఢ కృత్తిక సందర్భంగా రత్నగిరి బాలమురుగన్ ఆలయానికి భారీ సంఖ్యలో భక్తులు తరలివచ్చారు
వెల్లూరు, ఆగస్టు 6
రాణిపేట జిల్లా, ఆర్కాట్ సమీపంలోని రత్నగిరిలో ఉన్న అరుల్మిగు బాలమురుగన్ ఆలయంలో ఆషాఢ కృత్తిక సందర్భంగా ప్రత్యేక పూజలు నిర్వహించారు.
ఈ పండుగ సందర్భంగా, తవతిరు బాలమురుగన్ అడుమి స్వామిగారి సమక్షంలో మురుగన్ స్వామికి ప్రత్యేక అభిషేకం, అలంకరణ మరియు మహాదీపారాధన నిర్వహించారు.
దీని అనంతరం, వెండి రథం, నెమలి రథం, వృషభ రథం, మూషి రథం మరియు కల్తేరు వంటి వాహనాలను పూలతో అలంకరించి, ప్రత్యేక దీపారాధన నిర్వహించారు.
ఈ పండుగ సందర్భంగా, వివిధ గ్రామాలకు చెందిన భారీ సంఖ్యలో భక్తులు పన్నీర్ కావడి, పుష్ప కావడి, మయిల్ కావడి వంటి కావడిలను తమ భుజాలపై మోసి, డప్పులు మరియు సంగీత వాయిద్యాల మధ్య భక్తిశ్రద్ధలతో నృత్యం చేశారు. భక్తులు ఆలయ మెట్టు మీద కర్పూర దీపాలు వెలిగించి, గర్భగుడిలోని పవిత్రమైన బాలమురుగన్ దర్శనం చేసుకుని తమ మొక్కులు తీర్చుకున్నారు.
అంతేకాకుండా, ఈ ఉత్సవం సందర్భంగా వివిధ సంస్థలు ఆలయ ప్రాంగణంలో మరియు పరిసర ప్రాంతాలలో భక్తులకు నీరు, త్రాగునీరు మరియు ఆహారాన్ని అందించాయి.
వెల్లూరు, ఆర్కాట్, కాట్పాడి నుండి వంద ప్రత్యేక ప్రభుత్వ బస్సులను నడపగా, 2 లక్షలకు పైగా భక్తులు పాల్గొన్నారు.
పెద్ద సంఖ్యలో భక్తులు ఆలయంలో గుండు చేయించుకుని తమ మొక్కులు తీర్చుకున్నారు.
T
Comments
Post a Comment