வீரவணக்க நாள்

நக்சலைட் தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 46-வது வீரவணக்க நாள் அனுசரிப்பு

வேலூர்

கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி, நக்சலைட் தீவிரவாதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லும் போது அவர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் காவல் ஆய்வாளர்  பழனிச்சாமி, தலைமைக் காவலர் . ஆதிகேசவலு  மற்றும் காவலர்கள்  யேசுதாஸ் ,  முருகேசன் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 'வீரவணக்க நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி, 46-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி இன்று (06.08.2026) திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக W.I. தேவாரம், IPS, (ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர்) சிறப்புரையாற்றினார்.
 மேலும்,  K. விஜயகுமார், I.P.S., காவல்துறை இயக்குநர் (ஓய்வு) ,  துக்கையாண்டி,IPS., காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) ,  . J. மகேஷ், I.P.S., காவல்துறை துணைத்தலைவர், வேலூர் சரகம் அவர்கள்,
  G. ரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர், திருப்பத்தூர் மாவட்டம் 

அக்ஷய் அனில் வாகரே, I.P.S., காவல் கண்காணிப்பாளர், திருப்பத்தூர் மாவட்டம் அவர்கள், B.K. அரவிந்த், I.P.S., காவல் கண்காணிப்பாளர், Q பிரிவு, சென்னை
M. அசோக்குமார், I.P.S., காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு), தமிழ்நாடு  ஆகியோர் வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், நீதித்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள், உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தினர்.




నక్సల్ వ్యతిరేక ఆపరేషన్లలో అమరులైన పోలీసు సిబ్బందికి 46వ శౌర్య దినోత్సవం

వెల్లూరు

1980 ఆగస్టు 6న, నక్సలైట్లను అరెస్టు చేయడానికి పోలీసు జీపులో కోర్టుకు తీసుకువెళుతుండగా, జరిగిన బాంబు పేలుడులో ఇన్‌స్పెక్టర్ పళనిస్వామి, హెడ్ కానిస్టేబుల్ అధికేశవలు, కానిస్టేబుళ్లు యేసుదాస్ మరియు మురుగేశన్ అమరులయ్యారు.

వారి త్యాగానికి స్మారకంగా, ప్రతి సంవత్సరం ఆగస్టు 6న తిరుపత్తూరు నగర పోలీస్ స్టేషన్‌లో ‘వీరవణక నాల్’ను పాటిస్తారు.

ఈ నేపథ్యంలో, 46వ శౌర్య దినోత్సవాన్ని ఈరోజు (06.08.2026) తిరుపత్తూరు నగర పోలీస్ స్టేషన్‌లో నిర్వహించారు.

ఈ సందర్భంగా, డబ్ల్యూ.ఐ. దేవరామ్, ఐపీఎస్, (రిటైర్డ్ డైరెక్టర్ ఆఫ్ పోలీస్) వీడియో కాన్ఫరెన్సింగ్ ద్వారా ప్రత్యేక ప్రసంగం చేశారు.

అలాగే, పోలీస్ డైరెక్టర్ (రిటైర్డ్) కె. విజయకుమార్, ఐ.పి.ఎస్., అదనపు పోలీస్ డైరెక్టర్ (రిటైర్డ్) దుక్కైయండి, ఐ.పి.ఎస్., వెల్లూరు సర్కిల్ డిప్యూటీ కమిషనర్ ఆఫ్ పోలీస్ జె. మహేష్, ఐ.పి.ఎస్., తిరుపత్తూరు జిల్లా కలెక్టర్ జి. రవికుమార్,

తిరుపత్తూరు జిల్లా సూపరింటెండెంట్ ఆఫ్ పోలీస్ అక్షయ్ అనిల్ వాఘరే, ఐ.పి.ఎస్., చెన్నై, క్యూ డివిజన్ సూపరింటెండెంట్ ఆఫ్ పోలీస్ బి.కె. అరవింద్, ఐ.పి.ఎస్.,

తమిళనాడు సూపరింటెండెంట్ ఆఫ్ పోలీస్ (రిటైర్డ్) ఎం. అశోకుమార్, ఐ.పి.ఎస్., అమరవీరులైన పోలీసులకు పుష్పాంజలి ఘటించారు.

ప్రాణాలు కోల్పోయిన పోలీసులకు నివాళులర్పించేందుకు స్థానిక రాజకీయ ప్రముఖులు, న్యాయాధికారులు, రెవెన్యూ అధికారులు, డిప్యూటీ సూపరింటెండెంట్ ఆఫ్ పోలీస్‌లు, పోలీస్ ఇన్‌స్పెక్టర్‌లు, పోలీస్ అధికారులు, కానిస్టేబుళ్లు, మృతులైన పోలీసుల కుటుంబ సభ్యులు, ప్రజలు ఈ కార్యక్రమానికి హాజరయ్యారు.
+

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்