செய்திகள்

சாலை வசதி இல்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

வேலூர்

திருப்பத்தூர் மாவட்டம் எல்லபள்ளி ஏரி கொடி ரயில்வே லைன் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வழிப்பாதை இல்லாததால் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள் சாலை வசதி இல்லை என்று கூறி நீண்ட காலமாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய ஆணையாளர் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் இடத்தை ஆய்வு  மேற்கொண்டு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன


திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
 
வேலூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்கடா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மற்றும் தீபா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை ஜித்து சிங்காரவேலன் மற்றும் அவருடைய மனைவி தீபா இருவரும் சூளகிரியில் வேலை செய்து வருகின்றனர் இதன் காரணமாக இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில் குழந்தையை சிங்காரவேலனின் தாயார் கவனித்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உள்ளது. இதனை கவனிக்காமல் சிங்காரவேலனின் தாயார் இருந்துள்ளார் பின்னர் குழந்தை காணவில்லை என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால் தண்ணீர் தொட்டியை பார்த்துள்ளனர் அப்போது குழந்தை உயிரிழந்து மிதந்து கொண்டிருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய காரணத்தால் உறுப்பினர்கள் கதறி அழுதனர். 

தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது..


 குடியாத்தத்தில் இருந்து திருத்தணி காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் சுமார் 10மணி நேரம் பேருந்துக்காக  காத்திருந்து அவதிபேருந்து இருந்தும்  நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பேருந்தை  எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டுபேருந்தில் இடம் பிடிப்பதில் பக்தர்கள் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு 

வேலூர்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து  நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக சென்று வருகின்றனர்.இந்நிலையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றுஇரவு முதல் இன்று காலை வரை திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு பேருந்து இல்லை அதிகாரிகள் முறையாக பேருந்து இயக்கவில்லை என குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் பக்தர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது இதனிடையே காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் சுமார்
 10 மணி நேரமாக காத்திருப்பதாகவும் குடியாத்தம் பேருந்து பணிமனையில் இருந்து எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டி குடியாத்தம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் பேருந்து பணிமனையில் இருந்து பேருந்தை பக்தர்களுக்காக திருத்தணி செல்வதற்கு பணிமனை ஊழியர்கள் இன்று மதியம்ஏற்பாடு செய்தனர் திருத்தணியில் இருந்து குடியாத்தம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தில் ஜன்னல் வழியாக சீட்டு பிடிப்பதற்கு காவடி மற்றும் துண்டுகளை போட்டு இடம் பிடித்துக் கொண்டு பின்னர் பேருந்து ஏறி இருக்கையில் அமருவதில் பக்தர்கள் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது காவலர் பக்தர்கள் இடையே சமரசம் பேசி சமாதானம் செய்தனர் பின்னர் 10 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் அரசு பேருந்து ஏறி அரோகரா அரோகரா என கூறிக்கொண்டு காவடி எடுத்துக் கொண்டு திருத்தணி சென்றனர். 



ஆடிக்கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் திருத்தணிக்கு செல்ல முடியாமல் 10 மணி நேரம் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மோர்தானா அணை  மற்றும்  அங்கன்வாடி பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு 


வேலூர்
        வேலூர்மாவட்டம்,குடியாத்தம் அருகே ஆந்திர எல்லைபகுதியான தமிழகத்தில் மோர்தானா அணையானது கட்டப்பட்டுள்ளது இந்த அணையில் தேக்கபடும் நீர் குடியாத்தம்,கேவிக்குப்பம் வரையில் நீர்பாசன வசதிக்காக அமைக்கப்பட்டது இந்த அணையில் தற்போது நீர் இருப்பும் உள்ளது இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் நேரடியாக மோர்தானா அணைக்கு சென்று ஆய்வு செய்ததுடன் அணையின் மதகுகள் பராமரிப்பு மற்றும் பரப்பளவு நீர் இருப்பு போன்ற தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார் இதன் பின்னர் அங்குள்ள மோர்தானா அங்கன்வாடி மையத்தில் சத்துணவு கூடம் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன் அரசு துவக்கப்பள்ளியிலும் ஆய்வு செய்தார் இதில் மாணவர்கள் வரையில் தரமான சத்துணவு உணவு வழங்கபடுகிறதா அங்கன்வாடி மையத்தில் என ஆய்வு செய்தார் ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் வட்டாட்சியர் பிரியா உள்ளிட்ட திரளான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர் 
      மோர்தானா அணையை சுற்றுலாதளமாக மாற்ற வனத்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மோர்தானா அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்காக ஆய்வு செய்தார் மேலும் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவை என கோரிக்கை வைத்தனர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார் அப்பகுதி மக்கள்  வாழ்வாதாரம் மேம்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்


 வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல். 11 பேர் கைது செய்து விசாரணை.


வேலூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை வருவாய்த்துறையினர் பிடித்து, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.சின்ன வேப்பம்பட்டு ஏரியில் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில், வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் அள்ளி கடத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, மேல்நடவடிக்கைக்காக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்