ஆடி கிருத்திகை திருவிழா

வேலூர்   6-8-26

வேலூர்  கோட்டை கோவிலில் முருகர் வள்ளி தெய்வானைக்கு ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
___________________________________________
        வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தினுள்ள  முருகர் வள்ளி தெய்வானை சன்னதியில் இன்று ஆடிக்கிருத்திகை பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை செய்து முருகருக்கு ராஜ அலங்காரம் செய்து முருகர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு தங்கக்கவசம் அணிவித்து வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனைகள் நடைபெற்றது இதில் கலவசை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்


 திருப்பத்தூர்மாவட்டம்   


 ஆம்பூர் பச்சக்குப்பம் மயிலாடும் மலை முருகர் கோவில் ஆடிக்கிருத்திகை விழாதிரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் 

     திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியில் அமைந்துள்ள மயிலாடு மலை முருகர் கோவிலில் ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன இதில் முருகன் திருக்கோவிலில் உள்ள மூலவருக்கும் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை பெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வேண்டி அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர் பின்னர் மகா தீப ஆராதனை நடைபெற்றன


 ராணிப்பேட்டைமாவட்டம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு இரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

    ராணிப்பேட்டை மாவட்டம்,    ரத்தினகிரியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்றன.விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வுகள் தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து கருவறை மற்றும் அனைத்து சன்னதிகளிலும் வெள்ளிச் தேர் மயில் வாகனம், ரிஷப வாகனம், மூஷிக வாகனம், கல்தேர் உள்ளிட்ட வாகனங்களுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இத்திருவிழாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகளை தோளில் சுமந்தவாறு மேளதாளங்கள் மற்றும் வாத்திய இசையுடன் பக்தி பரவசமாக நடனமாடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவில் படிக்கட்டுகள் தோறும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள், கருவறையில் அருள்மிகு பாலமுருகனை தரிசித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும், திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்